கோலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான அஜித் - ஷாலினிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். பெரும்பாலும் குழந்தைகளை சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவதை தவிர்க்கும் அஜித். தங்களது மீது விழுந்த ஸ்பார்ட் லைட் வெளிச்சம், குழந்தைகள் மீது விழக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.
ஆனாலும் விமான நிலையத்தில், அம்மாவுடன் ஷாப்பிங் செல்லும் போது, பொதுவெளியில் விளையாடிய போது என தல அஜித்தின் செல்ல பிள்ளைகள் புகைப்படங்கள் ஏதேனும் ஒருவகையில் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி விடுகிறது.
மகன், மகள் விவகாரத்தில் என்னதான் கண்டிப்பு காட்டினாலும், தன்னுடன் செல்ஃபி கேட்கும் ரசிகர்களை என்றுமே அஜித் விலக்கியது இல்லை, சந்தோஷமாக நின்று போஸ் கொடுத்துவிட்டுத் தான் செல்வார். ஆனால் அஜித்தின் குழந்தைகள் போட்டோவை சோசியல் மீடியாவில் பார்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.
தல அஜித் மீது ரசிகர்கள் எந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கிறார்களோ? அதே அளவிற்கு மகன் ஆத்விக் மீதும் அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர். அதனால் தான் ஆத்விக்கை ‘குட்டி தல’ என அன்புடன் அழைக்கின்றனர்.
ஆத்விக்கின் எந்த புகைப்படம் வெளியானாலும் அதனை வைரலாக்கி விடுகிறார்கள். அந்த வகையில், ஆத்விக் தற்போது வருங்கால பைக் சாம்பியன் போல் தந்தையுடன் கொடுத்துள்ள போஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தலையில் ஹெல்மெட்டுடன் தான் போஸ் கொடுத்துள்ளார் ஆத்விக். இதை பார்த்த ரசிகர்கள்... அப்பா 8 அடி பாய்ந்தால், மகன் 16 அடி பாய்வார் என்பது போல் தெரிகிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
விரைவில் உலகம் முழுவதையும் பைக்கிலேயே சுற்றி வரும் முயற்சியில் அஜித் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் வாகா எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுடன் இவர் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலானதை தொடர்ந்து, மகனுடன் அஜித் எடுத்துக்கொண்டுள்ள இந்த புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.