கோட் படத்தில் தல? குட் பேட் அக்லி படத்தில் தளபதி? ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் கொடுக்கும் VP!

Ansgar R |  
Published : Aug 31, 2024, 04:32 PM IST

GOAT Update : வருகின்ற வெள்ளிக்கிழமை செப்டம்பர் 5ம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ளது தளபதியின் GOAT. அப்படத்திற்கான புக்கிங் கூட துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
14
கோட் படத்தில் தல? குட் பேட் அக்லி படத்தில் தளபதி? ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் கொடுக்கும் VP!
GOAT Movie

தளபதி விஜய் நடிப்பில் வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது "தி கிரேட்டெஸ்ட் ஆப்  ஆல் டைம்" திரைப்படம். இது தளபதி விஜயின் 68வது திரைப்படம் என்பதும், வெங்கட் பிரபுவோடு விஜய் இணையும் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து பல அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில், இன்று மாலை GOAT படத்தில் இருந்து நான்காவது சிங்கிள் வெளியாகவுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் முதல் செல்வராகவன் வரை; யுவன் இசையில் அறிமுகமாகி டாப் இயக்குனரானவர்கள் இத்தனை பேரா?

24
Captain Vijayakanth

"தி கிரேட்டெஸ்ட் ஆப் ஆல் டைம்" திரைப்படத்தை பொறுத்தவரை இரண்டு முக்கியமான விஷயங்கள் இடம்பெற்றிருக்கிறது. முதலாவது "சின்ன சின்ன கண்கள்" என்கின்ற ஒரு பாடலில் தளபதி விஜயோடு இணைந்து படுவது போல, மறைந்த பாடகி பவதாரணி அவர்களுடைய குரல் AI தொழில்நுட்பம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தின் காட்சிகளும் இப்படத்தில் அதே தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.

34
Actress Trisha

இது மட்டுமல்லாமல் இன்று வெளியாகும் கோட் படத்தின் நான்காவது (மட்ட பாடல்) சிங்களில், தளபதி விஜயோடு இணைந்து, பிரபல நடிகை, கோலிவுட் குயின் திரிஷா நடனமாடியுள்ளதாகவும், ஆகையால் அவரும் இந்த படத்தில் கேமெியோ கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த தகவல் இன்னும் படக்குழுவால் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இன்று மாலை அது உண்மையா? இல்லையா? என்பது உறுதியாகிவிடும்.

44
Venkat Prabhu

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தற்பொழுது பரவி வரும் ஒரு தகவலின்படி, GOAT திரைப்படத்தில் தல அஜித்தின் ஒரு சிறிய ரெஃபரன்ஸ் இருக்கும் என்றும், அது அவருடைய குரலாகவோ, அல்லது அவருடைய ஒரு காட்சியாகவோ, அல்லது அவர் பேசிய ஒரு வசனமாகவோ இருக்கலாம் என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல இப்போது அஜித் நடித்து வரும் "குட் பேட் அக்லி" திரைப்படத்தில் தளபதி விஜயின் ரெஃபரன்ஸ் இருக்கும் என்று வெங்கட் பிரபுவே கூறியதாக தற்பொழுது சில தகவல்கள் வெளியாகிவருகின்றது..

பாலியல் சீண்டல்; கேரள நடிகைகள் அடுக்கும் புகார்கள் - குரல் கொடுக்காமல் கப் சிப்னு இருக்கும் தமிழ் ஹீரோஸ்!!

Read more Photos on
click me!

Recommended Stories