ஏ.ஆர்.முருகதாஸ் முதல் செல்வராகவன் வரை; யுவன் இசையில் அறிமுகமாகி டாப் இயக்குனரானவர்கள் இத்தனை பேரா?

First Published | Aug 31, 2024, 2:55 PM IST

லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் சங்கர் ராஜாவின் 45வது பிறந்தநாளான இன்று அவரைப்பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல் ஒன்றை பார்க்கலாம்.

Yuvan shankar raja

இளையராஜாவின் மகனான யுவன் சங்கர் ராஜா, தன்னுடைய இசையால் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். யுவனின் பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கத் தூண்டும், போதையை போல் யுவனின் இசையும் அடிமையாக்கும் என்பதாலேயே இவரை டிரக் டீலர் என நெட்டிசன்கள் கலாய்ப்பத்துண்டு. இன்று யுவன் சங்கர் ராஜா தன்னுடைய 45-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரைப்பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவலை பார்க்கலாம்.

Director AR Murugadoss

யுவனின் இசையமைக்கும் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான இயக்குனர்கள் ஏராளம். அதிலும் அந்த இயக்குனர்கள் எல்லாம் தற்போது தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராக வலம் வருகிறார்கள். அவர்கள் யார் என்பதை பார்க்கலாம். கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை சென்று கலக்கி உள்ள இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், யுவன் சங்கர் ராஜா இசையமைத்த தீனா படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்துக்கு பின்னர் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை.

Latest Videos


Vishnu vardhan

அறிந்தும் அறியாமலும் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். இப்படத்திற்கு யுவன் தான் இசை. இதையடுத்து அவர் இயக்கிய பில்லா, சர்வம், ஆரம்பம் என அனைத்து படங்களுக்குமே யுவன் தான் இசையமைத்து இருந்தார்.

selvaraghavan

இயக்குனர் செல்வராகவனின் அறிமுக படத்திற்கு இசையமைத்தது யுவன் சங்கர் ராஜா தான். காதல் கொண்டேனில் தொடங்கிய இவர்களின் பயணம் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்... ராஜா வீட்டு கன்னுக்குட்டி யுவன் சங்கர் ராஜா! இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?

Yuvan with Director Ram

கற்றது தமிழ் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ராம். அப்படத்திற்கு உயிர் கொடுத்தது யுவன் சங்கர் ராஜாவின் இசை தான். இதையடுத்து அவர் இயக்கிய தங்கமீன்கள் தொடங்கி தற்போது இயக்கி உள்ள ஏழு கடல் ஏழு மலை படம் வரை யுவன் தான் இசையமைத்துள்ளார்.

Ameer Sulthan

இயக்குனர் அமீர் இயக்குனராக அறிமுகமான மெளனம் பேசியதே படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து இருந்தார். அப்படத்தை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் வெளிவந்தப் ராம், பருத்திவீரன் போன்ற படங்களின் பாடல்கள் காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகின்றன.

santhanam, Arya

காமெடி பட இயக்குனரான எம்.ராஜேஷ், யுவன் இசையமைத்த சிவா மனசுல சக்தி படம் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார். அவர் இயக்கிய மற்றொரு பிளாக்பஸ்டர் ஹிட் படமான பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துக்கும் யுவன் தான் இசையமைத்து இருந்தார்.

Yuvan, Venkat Prabhu

இயக்குனர் வெங்கட் பிரபுவும் யுவன் இசையமைத்த சென்னை 28 படம் மூலம் தான் அறிமுகமானார். அன்று தொடங்கிய இவர்களது வெற்றிப்பயணம் தற்போது விஜய்யின் கோட் படம் வரை தொடர்ந்து வருகிறது. இதுதவிர இன்று கோலிவுட்டில் டாப் இயக்குனர்களாக வலம் வரும் தியாகராஜன் குமாரராஜா, பி.எஸ்.மித்ரன், வினோத் ராஜ் ஆகியோரது அறிமுக படத்திற்கும் யுவன் தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... 1 நிமிட விளம்பரத்துக்கு 1 கோடி; ரசிகர்களை விட எனக்கு பணம் முக்கியமில்லைனு உதறித்தள்ளிய அஜித்!!

click me!