நடிகர் விஜய்யின் லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். ஏற்கனவே விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். லியோ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், லியோ படத்தில் புது வரவாக பிக்பாஸ் பிரபலம் அபிராமி வெங்கடாசலம் இணைந்துள்ளார். இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆவார். லியோ படப்பிடிப்பிற்காக தற்போது காஷ்மீர் சென்றுள்ள அபிராமி, அங்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு அப்படத்தில் இணைந்ததை உறுதி செய்துள்ளார்.