தன்னை விட 10 வயது சிறியவருடன் இரண்டாம் திருமணமா..? அஜித் பட நடிகை குறித்து தீயாய் பரவும் தகவல்..!!

First Published | Aug 18, 2021, 3:14 PM IST

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை சுரேகா வாணி, தற்போது இரண்டாம் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக ஒரு தகவல் தீயாக சுற்றிவருகிறது. ஆனால் இதுகுறித்து உண்மை தற்போது வரை வெளியாகவில்லை.
 

நடிகை சுரேகா வாணி, முன்னணி நடிகர்களான விஜய் நடித்த மெர்சல், அஜித்துடன் விஸ்வாசம், தனுஷுடன் உத்தம புத்திரன் , சிம்பு நடித்த 'வந்த ராஜாவாதான் வருவேன்' உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளவர். 
 

மேலும் தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
 

Tap to resize

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது கணவர் சுரேஷ் தேஜா உடல்நல குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும் திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
 

இவர பல தனியார் தொலைக்காட்சிகளில் சீரியல்களை இயக்கியும், சின்னத்திரையில் வசன கர்த்தாவாகவும் அறியப்பட்டவர்.

காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு சுப்ரிதா என்கிற மகள் உள்ளார். தற்போது தன்னுடைய மகளுடன் வசித்து வரும் சுரேகா வாணியின் இரண்டாவது திருமணம் குறித்து அவ்வப்போது சில வதந்திகள் வந்த வண்ணம் உள்ளது.
 

அந்த வகையில் தற்போது சுரேகா வாணி, தன்னை விட 10 வயது சிரியவரை, தன்னுடைய மகள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் குறித்து உண்மை இதுவரை வெளியாகாத நிலையில், இதுவும் வழக்கம் போல் வதந்தியாகவே பார்க்கடுகிறது .

சுரேகா வாணி, அவருடைய மகளுடன் சமூக வலைத்தளத்தில் போடும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம், எனவே அவ்வப்போது இவரை பற்றிய இது போன்ற வதந்திகளும் உலா வருகிறது.

Latest Videos

click me!