Ajith Car Accident at Portugal Car Race Event : துபாய் கார் விபத்து சம்பவத்திற்கு பிறகு மீண்டும் போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்று வரும் கார் ரேஸில் அஜித் கார் விபத்திற்குள்ளாகியுள்ளது.
மீண்டும் கார் விபத்தில் சிக்கிய அஜித் – விபத்துக்கு பிறகு என்ன சொல்லிருக்காரு பாருங்க!
Ajith Car Accident at Portugal Car Race Event : பைக் மற்றும் கார் ரேஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட அஜித் கடந்த ஜனவரி மாதம் துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் தொடரில் பங்கேற்றார். இதற்காக கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக துபாயில் தங்கி பயிற்சியும் மேற்கொண்டார். கார் ரேஸ்க்காக தன்னுடைய் காரையும் வடிமைத்தார். துபாய் கார் ரேஸ் தொடங்குவதற்கு முன்னதாக அஜித் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பிரேக் ஃபெயிலியர் காரணமாக கார் விபத்துக்குள்ளானது. எதிர்பாராத விதமாக இந்த கார் விபத்தில் அஜித்திற்கு எதுவும் நடக்கவில்லை. இதைத் தொடர்ந்து இந்த கார் ரேஸிலிருந்து விலகுவதாக அறிவித்து பின்னர் மீண்டும் கார் ரேஸில் பங்கேற்றார்.
24
மீண்டும் கார் விபத்தில் அஜித்
இதில் 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தார். துபாய் கார் ரேஸ் சீரிஸைத் தொடர்ந்து போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்று வரும் கார் ரேஸில் பங்கேற்றார். இதில் எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கியுள்ளார். பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவரது கார் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் அஜித்திற்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால், அவரது கார் மட்டுமே பயங்கரமாக சேதமடைந்துள்ளது.
34
அஜித் கார் விபத்து, போர்ச்சுகல் கார் ரேஸில் அஜித் கார் விபத்து
இந்த கார் விபத்திற்கு பிறகு பேட்டியளித்த அஜித் கூறியிருப்பதாவது: நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். சிறிய விபத்தில் சிக்கியிருந்தாலும் எங்களுக்கு எதுவும் ஆகவில்லை. கார் ரேஸில் வெற்றி பெறுவோம். எங்களுக்கு ஆதரவு அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அஜித் நடிப்பில் உருவான விடாமுயற்சி படமானது கடந்த 6ஆம் தேதி வெளியானது. ஆனால் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் இந்தப் படத்திற்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.
44
அஜித் பயிற்சியின் போது கார் விபத்தில் சிக்கியுள்ளார்
விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் மே 1 ஆம் தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.