தமிழ் திரையுலகில் மாஸ் நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை அடுத்து, அடுத்ததாக விடா முயற்சி படத்தில் நடிக்க உள்ளார் அஜித். இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் தடையறத் தாக்க, தடம், மீகாமன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் ஆவார். இப்படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.