தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷாலினி. இவர் ஹீரோயினாக குறுகிய காலம் மட்டுமே நடித்தாலும், அந்த காலகட்டத்தில் நடித்த படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. குறிப்பாக விஜய்யுடன் இவர் நடித்த காதலுக்கு மரியாதை, அஜித்துக்கு ஜோடியாக நடித்த அமர்க்களம் ஆகிய திரைப்படங்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளன.