Kichcha Sudeep
இந்தியத் திரைத்துறையில் பிரபலமாக விளங்கும் நடிகர் சுதீப், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் பாடகர் எனப் பன்முகத்திறமை கொண்டவர். இவர் கன்னட திரையுலகில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார். இதுதவிர இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ்ப் படங்களிலும் பணியாற்றியுள்ளார். கிச்சா சுதீப் கன்னட சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் ஆவார்.
Kichcha Sudeep
அந்த வகையில், மூன்றாம் வகுப்பு படிக்கும், 9 வயது நிரம்பிய சாக்ஷி என்கிற சிறுமி, மெட்டாஸ்டேடிக் அல்லாத ஆஸ்டியோசர்கோமா எனும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு சாமராஜ்பேட்டையில் உள்ள ஸ்ரீ சங்கரா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
Kichcha Sudeep
அவர் நடிகர் சுதீப்பின் தீவிர ரசிகை. அவர் சுதீப்பை நேரில் சந்திக்க வேண்டுமென்பது தனது கனவு என கூறி இருந்தார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இந்த சிறுமியின் ஆசையைப் பற்றி அறிந்த நடிகர் சுதீப், அந்தக் குழந்தையை நேரில் சந்தித்து உரையாடி, அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார். தனது கனவு நாயகன் சுதீப் அவர்களை நேரில் சந்தித்ததில் குழந்தை சாக்ஷி மிகவும் உற்சாகம் அடைந்தார். இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... பம்பர் முதல் போர் தொழில் வரை... இந்த வார தியேட்டர் மற்றும் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸா? - முழு லிஸ்ட் இதோ