25 Years of Love: Ajith and Shalini's wedding anniversary celebration! சினிமா பலரின் காதலுக்கு பாலமாக இருந்திருக்கிறது. அந்த சினிமாவில் நடித்த நடிகர், நடிகைகளே காதலித்து திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். அப்படி கோலிவுட்டில் நட்சத்திர காதல் ஜோடிகளின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் அதில் முதலில் இருப்பது அஜித் - ஷாலினி ஜோடி தான். இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்தது ஒரே படத்தில் தான். அப்போதே காதல் மலர்ந்து, அந்த படத்தை முடித்த கையோடு இருவரும் திருமணமும் செய்துகொண்டனர்.
25
Ajith Shalini
அஜித் - ஷாலினி 25வது திருமண நாள்
அஜித் - ஷாலினி ஜோடிக்கு கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் 24ந் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆனபோதிலும் இன்றளவும் இவர்களுக்கு இடையேயான காதல் என்பது குறைந்தபாடில்லை. அதீத காதலால், இருவருமே வயதாக வயதாக இளமையாகிக் கொண்டே செல்கிறார்கள். இன்று அஜித் - ஷாலினி ஜோடி தங்களது 25வது திருமண நாளை கொண்டாடி வருகிறார்கள். இவர்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில், அவர்களின் காதல் கதை பற்றி தற்போது பார்க்கலாம். அதன்படி சரண் இயக்கத்தில் உருவான அமர்க்களம் திரைப்படத்தில் நடித்தபோது தான் அஜித் - ஷாலினிக்கு இடையே காதல் மலர்ந்தது. ஷாலினியை பார்த்த முதல் நாளே அவர் மீது காதல் வயப்பட்டிருக்கிறார் அஜித். ஆனால் அந்த காதலை வெளியே சொல்லாமலே இருந்து வந்துள்ளார். ஒரு காட்சி படமாக்கப்பட்டபோது, எதிர்பாராத விதமாக ஷாலினியின் கையை கட் செய்துவிட்டாராம் அஜித், இதில் அவர் கையில் இருந்து ரத்தம் வந்ததும் பதறிப்போன அஜித் அவரை மருத்துவமனையில் அனுமதித்தது மட்டுமின்றி, உடன் இருந்து அக்கறையோடு பார்த்துக் கொண்டாராம்.
45
Ajith Wife Shalini
ஷாலினியின் பாடலுக்கு அடிமையான அஜித்
அஜித் தன் மீது அக்கறை காட்டுவதை பார்த்து ஷாலினிக்கும் அவர் மீது காதல் மலர்ந்துள்ளது. எங்கு தான் ஷாலினியை காதலித்துவிடுவேனோ என பயப்படுவதாக இயக்குனர் சரணிடமே அஜித் ஓப்பனாக கூறி இருக்கிறார். பின்னர் ஷாலினி பாடிய ‘சொந்தக் குரலில் பாட’ என்கிற பாடல் ரிலீஸ் ஆகும் முன்னரே அஜித்துக்கு போட்டுக் காட்டினார்களாம். அந்த பாடல் அஜித்துக்கு பிடித்துப் போக அதை ரிப்பீட் மோடில் கேட்கத் தொடங்கினாராம் அஜித். ஷாலினி மீது அஜித்துக்கு காதல் அதிகமாக இந்த பாடலும் ஒரு காரணமாக இருந்துள்ளது.
55
Ajith - Shalini Marriage
முதலில் புரபோஸ் பண்ணியது யார்?
பின்னர் வேறுவழியின்றி ஷாலினியிடமே சென்று புரபோஸ் செய்திருக்கிறார் அஜித். அவரும் ஓகே சொல்லி, தன் தந்தையிடம் வந்து பேசுமாறு கூறி இருக்கிறார். பின்னர் இருவரும் வீட்டில் சம்மதம் வாங்கிய பின்னர் கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் 24ந் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் ஒட்டுமொத்த திரையுலகமே கலந்துகொண்டு அஜித் - ஷாலினியை வாழ்த்தியது. இந்த ஜோடிக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர். அண்மையில் கார் ரேஸில் தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்று கோப்பையை கைப்பற்றிய சந்தோஷத்துடன் தன்னுடைய 25வது திருமண நாளையும் ஹாப்பியாக கொண்டாடி வருகிறார் அஜித்குமார்.