விஜய் பட சாதனையை அடிச்சு தூக்கிய அஜித்; புது வரலாறு படைத்த குட் பேட் அக்லி!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆன 24 மணிநேரத்தில் விஜய் பட டிரெய்லர் சாதனையை முறியடித்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆன 24 மணிநேரத்தில் விஜய் பட டிரெய்லர் சாதனையை முறியடித்துள்ளது.
அஜித் - விஜய் இருவருமே தமிழ் சினிமாவில் சமகால நடிகர்களாக அறிமுகமானார்கள். பின்னர் இருவரும் தங்களது கடின உழைப்பால் முன்னேறி இன்று தங்களுக்கென தனி ரசிகர் படையையே உருவாக்கி வைத்துள்ளனர். விஜய் படம் ரிலீஸ் ஆனால் அதன் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை அஜித் படத்தோடு ஒப்பிடுவதும், அஜித் படம் வெளியானால் அதன் சாதனைகளை விஜய் படத்தோடு ஒப்பிடுவதும், தொடர்கதை ஆகி வருகிறது.
ரிப்பீட் மோடில் பார்க்கப்படும் குட் பேட் அக்லி டிரெய்லர்
அந்த வகையில், சமீப காலமாக விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்களின் டிரெய்லர் ரிலீஸ் ஆனால் அதில் யார் பட டிரெய்லர் அதிக வியூஸ் அள்ளுகிறது, லைக்ஸ் அள்ளுகிறது என இந்த இரு நடிகர்களுக்கு இடையே போட்டி என்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆனது. இந்த டிரெய்லர் அஜித் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருந்ததால் அதை ரிப்பீட் மோடில் பார்த்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... குட் பேட் அக்லி விண்டேஜ் சாங்ஸ் சீக்ரெட் : ஒன்னு ராஜா பாட்டு; இன்னொன்னு சினிமா பாட்டே இல்லையா?
லியோ சாதனையை முறியடித்த குட் பேட் அக்லி
இந்நிலையில், குட் பேட் அக்லி டிரெய்லர் ரிலீஸ் ஆன 24 மணிநேரத்தில் அதிக வியூஸ் அள்ளி சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை வெளியான டிரெய்லர்களில் 24 மணிநேரத்தில் அதிக வியூஸ் அள்ளிய டிரெய்லராக விஜய்யின் லியோ பட டிரெய்லர் இருந்தது. அந்த டிரெய்லரை வெளியான 24 மணிநேரத்தில் 31.4 மில்லியன் பேர் பார்த்திருந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த இந்த சாதனையை தற்போது குட் பேட் அக்லி டிரெய்லர் முறியடித்து உள்ளது.
புது வரலாறு படைத்த குட் பேட் அக்லி
குட் பேட் அக்லி டிரெய்லர் ரிலீஸ் ஆன 24 மணிநேரத்தில் 32 மில்லியன் வியூஸ் அள்ளி அதிகம் பேர் பார்த்த தமிழ் பட டிரெய்லர் என்கிற சாதனையை படைத்துள்ளது. இந்தப் பட்டியலில் 29.28 மில்லியன் பார்வைகளுடன் துணிவு பட டிரெய்லர் மூன்றாம் இடத்தில் உள்ளது. அடுத்ததாக விஜய்யின் பீஸ்ட் பட டிரெய்லர் 29.08 மில்லியன் பார்வைகளுடன் நான்காவது இடத்திலும், 29 மில்லியன் வியூஸ் உடன் கோட் பட டிரெய்லர் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. விரைவில் விஜய்யின் ஜன நாயகன் பட டிரெய்லர் இந்த சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... அஜித்தின் 'குட் பேட் அக்லீ' டிரைலர் எதிர்கொள்ளும் நெகட்டிவ் விமர்சனங்கள்; ஏன்?