குட் பேட் அக்லி பார்க்க வருபவர்களுக்கு ஹால்ஸ் மிட்டாய் சப்ளை செய்யும் அஜித் ரசிகர்கள்
அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதை பார்க்க வரும் ரசிகர்களுக்கு ஹால்ஸ் மிட்டாய் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதை பார்க்க வரும் ரசிகர்களுக்கு ஹால்ஸ் மிட்டாய் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
Ajith Fans Distribute Halls ahead of Good Bad Ugly Release : நடிகர் அஜித் குமார் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் அஜித் உடன் திரிஷா, பிரியா பிரகாஷ் வாரியர், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அந்நிறுவனம் இப்படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார்.
மாஸ் விருந்தாக வந்த குட் பேட் அக்லி
அஜித் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு டபுள் ட்ரீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்த விடாமுயற்சி படம் அட்டர் பிளாப் ஆனதால் அப்செட்டான ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட படம் தான் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படத்தில் மாஸ் இல்லை என புலம்பிய ரசிகர்களுக்கு முழுக்க முழுக்க ஒரு மாஸ் விருந்தாக வந்துள்ள படம் தான் குட் பேட் அக்லி. நடிகர் அஜித்துக்கும் இது கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Good Bad Ugly Review : எப்படி இருக்கு குட் பேட் அக்லி? Good-ஆ? Bad-ஆ? விமர்சனம் இதோ
குட் பேட் அக்லிக்கு ரெஸ்பான்ஸ் எப்படி?
குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே வெளிநாடுகளில் படம் ரிலீஸ் ஆகிவிட்டது. அங்கு படம் பார்த்த ரசிகர்கள், இது ஃபேன்ஸுக்காகவே எடுக்கப்பட்ட படம் என்றும் முழுக்க முழுக்க மாஸ் காட்சிகள் நிரம்பி இருப்பதாகவும், கூறி வருகின்றனர். குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதல் ஷோ பார்க்க வந்த ரசிகர்கள் தியேட்டரில் ஆடிப்பாடியும், அஜித் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடி வருகின்றனர்.
ஹால்ஸ் மிட்டாய் கொடுத்த அஜித் ரசிகர்கள்
சென்னையில் புகழ்பெற்ற திரையரங்குகளுள் ஒன்றான ரோகினி தியேட்டரில் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு ஹால்ஸ் மிட்டாய் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. படத்தில் நிறைய மாஸ் காட்சிகள் இருப்பதால், படம் பார்க்க வரும் ரசிகர்கள் கத்தி கத்தி தொண்டை வரண்டு போய் விடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஹால்ஸ் மற்றும் விக்ஸ் மிட்டாய்களை ஒவ்வொரு இருக்கையிலும் வைத்துள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... குட் பேட் அக்லி முதல் சாவா வரை; இந்த வாரம் தியேட்டர் & OTTயில் இத்தனை படங்கள் ரிலீஸா?