நடிகை ஹூமா குரேஷிக்கும், அவருடைய காதலருக்கும் தற்போது ரகசிய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல், பாலிவுட் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது .
பாலிவுட் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஹூமா குரேஷி . தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும், அழகாலும், முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த வகையில் தமிழில் இவரை அறிமுகப்படுத்திய பெருமை, பிரபல இயக்குனர் பா ரஞ்சித்தையே சேரும்.
பா ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து, இயக்கிய 'காலா' திரைப்படத்தி ஹூமா குரேஷி, ரஜினிகாந்தின் முன்னாள் காதலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரஜினிகாந்துக்கு இணையான முதிர்ச்சியான நடிப்பை அழகாக வெளிப்படுத்தினார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ், ஹிந்தி மட்டும் இன்றி மராத்தி, மலையாளம், ஆங்கிலம், போன்ற மொழிகளிலும் ஹுமோ குரேஷி நடித்துள்ளார். குறிப்பாக நடிகர் அஜித் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு போனி கபூர் தயாரிப்பில், எச் வினோத் இயக்கத்தில் வெளியான 'வலிமை' திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் சுமார் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரூ.234 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது.
45
ஹுமோ குரேஷி ரகசிய நிச்சயதார்த்தம்:
சமீப காலமாக திரைப்படங்களை தாண்டி வெப் சீரிஸ்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். 39 வயதாகும் நடிகை ஹீமோ குரேஷி தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வலம் வந்த நிலையில், இப்போது அவருடைய நீண்ட நாள் காதலர் ரஷித் சிங் என்பவருடன் ரகசிய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
55
யார் இந்த ரஷித் சிங்?
ரஷித் சிங், பல முக்கிய பாலிவுட் நடிகர்களுக்கு நடிப்பு பயிற்சி கொடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. சில திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். இவர்கள் இருவருமே கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாக பாலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்ட நிலையில்... தற்போது நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் இதுவரை இருவருமே அதிகார பூர்வமாக இந்த தகவலை அறிவிக்கவில்லை. கூடிய விரைவில் திருமண தேதியோடு ஹுமோ குரேஷி மற்றும் ரஷித் சிங் தங்கள் காதல் திருமணம் குறித்து அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.