கார்த்திக் போட்ட மாஸ்டர் பிளான்.. ஷாக்கான சாமுண்டீஸ்வரி நடந்தது என்ன? கார்த்திகை தீபம் 2 அப்டேட்!

Published : Sep 16, 2025, 04:33 PM IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், கார்த்திகை தீபம் 2 தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில், இன்றைய தினம் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்ப்போம். 

PREV
13
கார்த்திகை தீபம்' 2 சீரியல்

கார்த்திகை தீபம்' 2 தொடரின் நேற்றைய எபிசோடில், கார்த்திக் சந்திரகலாவை வைத்து காளியம்மாவுக்கு போன் போட வைத்த நிலையில், சாமுண்டீஸ்வரியிடம் இருந்து வீட்டை எழுதி வாங்கிய அந்த நபர் காளியம்மாவின் வீட்டில் தான் மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற உண்மை கார்த்திக்கு தெரிய வருகிறது. இதனால் காளியம்மா முகத்திரையை கிழிக்க கார்த்திக் மாஸ்டர் பிளான் ஒன்றை போடுகிறான். அதாவது மயில்வாகனத்துக்கு சாமியார் வேடம் போட வைக்கிறான். சாமுண்டீஸ்வரியின் நான்கு பெண்களும் அவனுக்கு உதவி பெண்களாக மாறுகின்றனர்.

Meena 2nd Marriage: 49 வயதில் மீனாவுக்கு 2-ஆவது திருமணமா? அவரே பகிர்ந்த தகவல்!

23
காளியம்மா வீட்டிற்குள் பூஜை

காளியம்மா வீட்டிற்குள் திடீர் என நுழையும் அவர்கள், அவளை நம்ப வைத்து வீட்டில் பூஜை செய்ய வேண்டும் என்றும், எல்லா ரூமிலும் சென்று பூஜை செய்த தீர்த்தத்தை தெளிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். தீர்த்தம் தெளிப்பதற்காக எல்லா ரூமையும் திறந்து காட்டும் காளியம்மா, ஒரு ரூமை மட்டும் திறக்காமல் அந்த ரூமில் பூஜை செய்ய வேண்டாம் என்று கூறுகிறாள். அந்த ரூமில் தான் சம்மந்தப்பட்ட நபர்கள் மறைத்து வைக்கப்பட்டு உள்ளனர் என்பது தெரிய வர மயில் வாகனம் கார்த்திக்கு இந்த தகவலை சொல்கிறான்.

மிராய் கதை காப்பியா? 56 ஆண்டுகளுக்கு முன்பு வந்த படத்தின் சாயல்?

33
நீங்க எப்படி இப்படி ஏமாந்தீங்க?

மறுபக்கம் சாமுண்டீஸ்வரி லாயரை வர வைத்து சிவனாண்டி சொத்தை எழுதி வாங்கிய விஷயத்தை சோகத்தோடு சொல்கிறார். ஆனால் லாயர் நீங்க எப்படி இப்படி ஏமாந்தீங்க? ஆச்சரியமா இருக்கு என்று சொல்கிறார். மேலும் சிவனாண்டி பயங்கரமாக பிளான் போட்டு உங்க கிட்ட கையெழுத்து வாங்கி இருக்கான், சட்ட ரீதியா இதுல எதுவும் பண்ண முடியாது என்று ஷாக் கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் தொடரை தொடந்து பாருங்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories