புகழ்பெற்ற யூடியூபரான டிடிஎப் வாசன், தனக்கு நாளை கல்யாணம் நடக்க இருப்பதாகவும், தான் திருமணம் செய்துகொள்ள உள்ள பெண் யார் என்பதையும் அறிவித்திருக்கிறார்.
யூடியூப்பில் பைக்கில் சாகசம் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் பேமஸ் ஆனவர் தான் டிடிஎப் வாசன். குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கண்ட வாசன், சிக்காத சர்ச்சைகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். போலீஸுக்கே சவால்விடும் வகையில் பேசியது முதல் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்தில் சிக்கியது வரை வரிசையாக சர்ச்சைகளில் சிக்கி வந்த டிடிஎப் வாசன், கடந்த ஆண்டு ஜெயிலுக்கும் சென்று வந்தார். இவரின் ஓட்டுநர் உரிமமும் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது. சமீப காலமாக எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார் வாசன்.
24
டிடிஎப் வாசனுக்கு திருமணம்
அவர் நடிப்பில ஐபிஎல் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஷாக்கிங் அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் வாசன். அதன்படி தனக்கு நாளை திருமணம் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறி இருக்கிறார். தான் ராஜஸ்தானில் ரைடு செய்துகொண்டிருந்தபோது தன்னுடைய காதலி அவசரமாக போன் பண்ணி வரச் சொன்னதால் வந்ததாக அந்த வீடியோவில் கூறி இருக்கிறார்.
34
பொண்ணு யார் தெரியுமா?
டிடிஎப் வாசன் தன்னுடைய சொந்த மாமா பொண்ணை தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வருகிறாராம். பேமிலிக்கு இந்த விஷயம் தெரிந்ததும் வீட்டை விட்டு வாசனுக்காக ஓடிவந்துவிட்டாராம் அந்தப் பெண். அவரை வாசன் செல்லமாக ஸ்வீட்டு என்று தான் அழைக்கிறார். அந்தப் பெண்ணிடம் 3 மாதங்கள் டைம் கேட்டிருக்கிறார் வாசன். ஏனெனில் மூன்று மாதத்தில் அவர் நடித்த படம் ரிலீஸ் ஆக உள்ளதாம். படம் ரிலீஸ் ஆன பின்னர் ஒரு ஹீரோவாக கெத்தாக வந்து பொண்ணு கேட்கலாம் என நினைத்தாராம் வாசன்.
அந்தப் பெண்ணிடம் நீ கல்யாணம் பண்ணுவதில் உறுதியாக இருக்குறியா என வாசன் கேட்க, அவர் கன்பார்ம் என சொல்வதும் அந்த வீடியோவில் ரெக்கார்டு ஆகி உள்ளது. கோவிலில் போய் கல்யாணம் பண்ணிக்கலாமா என வாசன் கேட்டதும், அந்தப் பெண்ணும் ஓகே என சொல்கிறார். நீங்க பயப்படுறீங்களா என அந்த பெண் கேட்க, அதற்கு அவர் பயமெல்லாம் எனக்கு என்னைக்குமே கிடையாது என சொல்கிறார். பேமிலி சம்மதத்தோடு கல்யாணம் பண்ண வேண்டும் என்பது தனக்கு ஆசை அதனால் தான் யோசிப்பதாக கூறி இருக்கிறார் வாசன். அவரின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.