Published : Apr 29, 2025, 12:35 PM ISTUpdated : Apr 29, 2025, 12:40 PM IST
அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்தில் நடித்த நடிகர் ஒருவர் தன்னுடைய வயிற்று பிழைப்புக்காக வாட்ச்மேன் வேலை செய்து வருவதாக கூறியுள்ள தகவல் வைரனாகி வருகிறது.
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடித்தட்டில் கிடந்தவரை கூட சினிமா உச்சத்தில் வைத்து, அழகு பார்த்தது உண்டு.
26
Successful Actors in Tamil Cinema:
சினிமா பின்னணி இன்றி உயர்ந்த நட்சத்திரங்கள்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் காமெடி நடிகர் சூரி வரை இப்படி எந்த ஒரு சினிமா பின் புலம்பும் இல்லாமல், இன்று முன்னணி நட்சத்திரங்களாக மாறி உள்ளனர். அதேபோல் நடிகர் அஜித்தும், எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி திரையுலகில் அறிமுகமாகி தன்னுடைய திறமையால் உயர்ந்தவர் தான். ஒரு நடிகர் என்பதை தாண்டி விளையாட்டு துறையிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.
கார் ரேஸ்ஸில் கலந்து கொண்டு தன்னுடைய சிறப்பான பங்களிப்பால் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள அஜித்தை கௌரவிக்கும் விதமாக, பத்மபூஷன் விருதை இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவித்தது மத்திய அரசு. நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விருது விழாவில், அஜித் தன்னுடைய குடும்பத்தோடு சென்று இந்த விருதை பெற்றுக் கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருவதோடு வாழ்த்துக்களும் குவிந்துள்ளது.
46
Aarambam Movie Actor Savi Sindhu:
'ஆரம்பம்' பட நடிகர் சவி சிந்து:
இந்நிலையில் நடிகர் அஜித் நடித்த திரைப்படத்தில் பணியாற்றிய பிரபலம் ஒருவரின் பரிதாப நிலை குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. "2013 ஆம் ஆண்டு இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஆரம்பம்'. இந்த படத்தில் தீவிரவாத குழுவை சேர்ந்த நபர்களில் ஒருவராக நடித்தவர் சவி சிந்து. லக்னோவை பூர்வீகமாகக் கொண்ட இவர், சட்டம் படித்த நிலையில் சினிமா மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக நடிப்பில் தன்னுடைய கவனத்தை செலுத்த துவங்கினார்.
ஆனால் இவருக்கு நினைத்தது போல் பட வாய்ப்புகள் அமையவில்லை. ஒரு கட்டத்தில் இவருடைய குடும்பத்தினரே இவரை விட்டு விலகிய நிலையில், தற்போது தன்னுடைய அன்றாட வயிற்றுப் பிழைப்புக்காக வாட்மேனாக வேலை செய்து வருகிறார். இந்த தகவலை கூறியுள்ள சவி சிந்து தனக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார்.
66
Savi Sindhu Acting Bollywood Movies:
பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்:
சவி சிந்து 'ஆரம்பம்' படம் மட்டுமல்லாது, பல பாலிவுட் படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். ஆனால் இவருடைய கதாபாத்திரங்கள் எதுவும் அதிகம் பேசப்படவில்லை. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வாட்ச்மேன் வேலை செய்தாலும், தன்னால் தன்னுடைய அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லை என்றும், தனக்கு படங்கள் பார்ப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் தன்னுடைய வருமானத்தை வைத்து எந்த ஒரு தியேட்டருக்கும் தன்னால் செல்ல முடியவில்லை. அதற்கான பணமும் என்னிடம் கிடையாது என கூறியுள்ளார். இவருக்கு பாலிவுட் திரை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் கை கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.