May 2025: 5 major Tamil films releasing in theaters!
2025-ம் ஆண்டு தற்போது தான் பிறந்தது போல் இருந்தது. அதற்குள் நான்கு மாதங்கள் கடகடவென ஓடிவிட்டன. இந்த நான்கு மாதங்களில் தமிழ் சினிமாவுக்கு வசூல் ரீதியாக நல்ல லாபத்தை கொடுத்த மாதமாக ஏப்ரல் மாதம் இருந்தது. ஏனெனில் இந்த ஏப்ரல் மாதத்தில் குட் பேட் அக்லி, சச்சின் ரீ ரிலீஸ், கேங்கர்ஸ் என மூன்று படங்கள் வெற்றிவாகை சூடின. இந்த மகிழ்ச்சியோடு மே மாதத்திற்கு அடியெடுத்து வைக்க உள்ளது கோலிவுட். மே மாதம் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் போட்டிபோட்டு ரிலீஸ் ஆக உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.
26
ரெட்ரோ (Retro)
மே 1ந் தேதி விடுமுறை தினம் என்பதால் அன்று சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் திரைக்கு வர உள்ளது. அப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கிறார். அதில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை 2டி நிறுவனம் சார்பாக சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்து உள்ளனர். ரெட்ரோ திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிக்கெட் முன்பதிவும் தற்போது படு ஜோராக நடைபெற்று வருகிறது.
36
டூரிஸ்ட் பேமிலி (Tourist Family)
ரெட்ரோ படத்துக்கு போட்டியாக மே 1ந் தேதி திரைக்கு வர உள்ள மற்றொரு திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. இப்படத்தை அபிஷன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படத்தில் சசிகுமார் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக சிம்ரனும் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் இலங்கைத் தமிழராக நடித்துள்ளார் சசிகுமார். இப்படம் ரிலீஸ் ஆகும் முன்னரே, இப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
கோடை காலம் என்றாலே பேய் படங்கள் தவறாமல் வந்துவிடும். கடந்த ஆண்டு கோடை விடுமுறையில் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 திரைப்படம் ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டது. அதேபோல் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் என்கிற பேய் படம் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற மே 16-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கெளதம் மேனன், கஸ்தூரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
56
மாமன் (Maaman)
வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்த சூரி, அப்படத்தின் வெற்றிக்கு பின் தனக்கு காமெடி கேரக்டரே வருவதில்லை என கூறி இருந்தார். இதனால் முழுநேர ஹீரோவாக மாறியுள்ள அவர் தற்போது மாமன் என்கிற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி உள்ளார். இதில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடித்துள்ளார். இப்படமும் வருகிற மே 16-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
66
ஏஸ் (Ace)
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த மகாராஜா திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அவர் நாயகனாக நடித்துள்ள மற்றொரு திரைப்படமான ஏஸ் வருகிற மே மாதம் 23-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடித்துள்ளார்.