Ethirneechal 2 Serial : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது சீசனில் பிரபல வில்லன் நடிகர் எண்ட்ரி கொடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
சன் டிவியில் சக்கைப்போடு போட்டு வந்த சீரியல்களில் எதிர்நீச்சல் சீரியலும் ஒன்று. கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வந்தார். இந்த சீரியல் டிஆர்பியில் சக்கைப்போடு போட்டதோடு, சோசியல் மீடியாவிலும் செம டிரெண்டிங்கில் இருந்தது. இதற்கு காரணம் இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்து தான். அவர் பேசிய டயலாக்குகள் அனைத்தும் மீம் டெம்பிளேட்டுகளாக மாறின.
24
Ethirneechal 2 Serial Team
இப்படி சக்கைப்போடு போட்டு வந்த எதிர்நீச்சல் சீரியலுக்கு திடீரென பின்னடைவு ஏற்பட்டது. அதற்கு காரணமும் மாரிமுத்து தான். அவர் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததால், அந்த சீரியலுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. இதையடுத்து மாரிமுத்துவுக்கு பதில் ஆதி குணசேகரனாக நடிக்க வேல ராமமூர்த்தி தேர்வானார். இருந்தாலும் மாரிமுத்து அளவுக்கு அவரால் அந்த கேரக்டரை தூக்கி நிறுத்த முடியவில்லை.
இதனால் வேறு வழியின்றி எதிர்நீச்சல் 2 சீரியலை கடந்த ஜூன் மாதம் முடிவுக்கு கொண்டு வந்தனர். பின்னர் புத்தம் புது கதைக்களத்துடன் எதிர்நீச்சல் தொடரின் இரண்டாவது சீசன் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இதில் முதல் சீசனில் நாயகியாக நடித்த மதுமிதாவுக்கு பதில் பார்வதி நடித்து வருகிறார். இதுதவிர கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, வேல ராமமூர்த்தி என முதல் சீசனில் நடித்த பெரும்பாலானோர் இந்த சீசனலும் நடித்து வருகின்றனர்.
44
இந்த நிலையில், எதிர்நீச்சல் 2 சீரியலில் பிரபல சின்னத்திரை வில்லன் நடிகரான அஜய் கபூர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் எதிர்நீச்சல் சீரியல் நடிகை பிரியதர்ஷினி உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலானதை தொடர்ந்து அவர் எதிர்நீச்சல் 2 சீரியலில் நடிப்பதாக பேச்சு அடிபட தொடங்கியுள்ளது. எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் இதற்கு முன்னர் இயக்கிய பிளாக்பஸ்டர் ஹிட் சீரியலான கோலங்கள் தொடரில் அஜய் கபூர் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.