திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

First Published | Oct 1, 2022, 3:52 PM IST

தற்போது திருப்பதியில் நடைபெற்று வரும் உற்சவத்தில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த். சமீபத்தில் தான் தனது கணவரும் நாயகனுமான தனுசை பிரிந்திருந்தார். கடந்த 2004 ஆம் ஆண்டு தனுசு காதல் கரம் பிடித்த இவர் 18 ஆண்டுகள் கழித்து அவரை விவாகரத்து செய்துள்ளார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. 

தற்போது ஹாலிவுட் வரை தனது புகழை பரப்பி உள்ள தனுஷ்- ஐஸ்வர்யா இடையே சமீபத்தில் தான் பிரச்சனை வெடித்துள்ளது.  ஒரு நடிகை தான் காரணமாக தான் இவர்கள் பிரிந்ததாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

மேலும் செய்திகளுக்கு...ஆதித்த கரிகாலனுக்கு கிடைத்த ஆக்ரோஷமான வரவேற்பு... இதவிட பெரிய சந்தோஷம் இல்ல - விக்ரம் எமோஷனல் பேச்சு

Tap to resize

aishwarya rajinikanth

இதற்கிடையே தனது தோழியும், காதலியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை  நினைவில் கொண்டு தான் தனுஷ் திருச்சிற்றம்பலத்தின் பாடல்களை இயற்றியதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். விவகாரத்திற்கு பிறகு உடனடி காரணமாக பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது இயக்கம், இசை ஆல்பம் என பிசியாக இருக்கிறார்.

aishwarya rajinikanth

இதற்கிடையே சைக்கிளிங், ஒர்க் அவுட் என தனது உடலை கட்டுடலாக மாற்றும் முயற்சியில் இருக்கும் இவர் அவ்வப்போது தனது வீடியோக்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். இதனிடையே அவ்வப்போது கோவில்களையும் சுற்றி வருகிறார். 

பொன்னியின் செல்வன் படத்தின் டிக்கெட் 1200 ரூபாயா?.. இதென்ன பகல் கொள்ளையா இருக்கே - எந்த ஊரில் தெரியுமா?

Aishwarya Rajinikanth

அதன்படி முன்னதாக தனது பிள்ளைகளுடன் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி,  கணவர் தனுஷ் மற்றும் பிள்ளைகளுடன் இருந்த பள்ளி புகைப்படம் திருவண்ணாமலை கோயில் தரிசனம் என புகைப்படங்கள் ட்ரெண்டாகி வந்தன. அந்த வரிசையில் தற்போது திருப்பதியில் நடைபெற்று வரும் உற்சவத்தில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Latest Videos

click me!