கொரோனா நிவாரணத்திற்கு நிதி வழங்கிய நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ் - நிதி அகர்வால்..! எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவால் கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகைகள் இதுவரை, தமிழக மக்களுக்கு உதவும் நோக்கில்... எந்த ஒரு நிதி உதவியும் வழங்க முன் வராத நிலையில், சில லட்சங்களில் சம்பளம் பெரும் நாயகிகள் முதல்வரின் கொரோனா நிவாரணத்திற்கு நிதி வழங்கியுள்ளனர்.
 

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் தமிழக அரசுக்கு உதவும் விதமாக அனைவரும் தாராளமாக நிதி அளிக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து, அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் என பலர் தங்களால் முடிந்த தொகையை, முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தும், ஆன்லைன் பரிவர்த்தனை மூலமும் கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் இதுவரை, நடிகர் சூர்யா, அஜித், சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த், நெப்போலியன், இயக்குனர் ஷங்கர், இயக்குனர் வெற்றி மாறன், ஏ.ஆர்.முருகதாஸ், விக்ரம், உள்ளிட்ட பலர் தங்களால் முடிந்த நிதி உதவியை கொடுத்து வருகிறார்கள்.
இவர்கள் வழங்கும் நிதிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்குவது, ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிப்பதற்கு, மருத்துவ உபகரணங்கள் வாங்குவது, தடுப்பூசி வாங்குவது, போன்ற பணிகளுக்கு செலவு செய்யப்பட உள்ளது.
இதுவரை தொடர்ந்து நடிகர்கள் மட்டுமே நிதி உதவி அளித்து வந்த நிலையில், முதல் முறையாக இருந்து கதாநாயகிகள் நிவாரண நிதி வழங்கியுள்ளனர்.
தமிழில் தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து, தனக்கென ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ரூபாய் 1 லட்சம் கொரோனா நிவாரண நிதி வழங்கியுள்ளார்.
இவரை தொடர்ந்து தமிழில் ஜெயம் ரவி நடித்த 'பூமி' மற்றும் சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ள நிதி அகர்வால் ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.
கோடிகளில் சம்பளம் பெரும் நாயகிகள் இது வரை, நிவாரணம் வழங்குவது குறித்து வாய் திறக்காத நிலையில், சில லட்சங்களில் மட்டுமே சம்பளம் பெரும் நடிகைகள் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கியுள்ளதற்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!