7 வருடத்திற்கு மேல் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை சமந்தா மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் கடந்த மாதம் திடீரென பிரிவதாக அறிவித்தனர்.
எனினும் நண்பர்களாக தொடர்ந்து இருப்போம் என்று சமூக வலைதளங்களில் ஒரே நேரத்தில் பதிவிட்டனர். இவர்களது திருமண முறிவு யாரும் எதிர்பாராத ஒன்று என, நாகசைதன்யா குடும்பத்தினர் மற்றும் சமந்தாவின் பெற்றோர் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விவாகரத்துக்கு பின் எழுந்த சில வதந்திகள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான சமந்தா, அதற்க்கு சமூக வலைத்தளத்தில் விளக்கம் கொடுத்தது மட்டும் இன்றி, ஆன்மீக சுற்றுலா மற்றும் தன்னுடைய அடுத்தடுத்த வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
அதே போல் தெலுங்கு திரையுலகில் நாக சைதன்யாவும் பிஸியாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தாவும் அடுத்தடுத்த படங்களில் படு பிசியாகி வருகிறார்.
இந்த நிலையில் சமந்தாவின் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு மீண்டும் நாகசைதன்யா காதலில் விழுந்து விட்டாரா? என்கிற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது இவரது லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு.
இதில் ’என் வாழ்க்கைக்கு ஒரு காதல் கடிதம்’ என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாகசைதன்யா பதிவு செய்துள்ளார். கிரீன் லைட் என்ற புத்தகத்தை பதிவு செய்துள்ள அவர், ‘உங்கள் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மேத்யூ’ என்றும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நாக சைதன்யாவுக்கு புதிய காதல் தோன்றியதா? அல்லது அந்த புத்தகத்தை தான் இப்படி வர்ணித்துள்ளாரா என நெட்டிசன்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.