இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! தனுஷை தொடர்ந்து மணிரத்னம் பட ஹீரோவுடன் கூட்டணி அமைத்த திருச்சிற்றம்பலம் இயக்குனர்

Published : Feb 12, 2023, 03:15 PM IST

தனுஷை வைத்து திருச்சிற்றம்பலம் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கும் அடுத்த பட அப்டேட் வெளியாகி உள்ளது.

PREV
14
இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! தனுஷை தொடர்ந்து மணிரத்னம் பட ஹீரோவுடன் கூட்டணி அமைத்த திருச்சிற்றம்பலம் இயக்குனர்

இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மித்ரன் ஆர் ஜவஹர். இவர் கடந்த 2008-ம் ஆண்டு தனுஷ் - நயன்தாரா நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியை ருசித்த மித்ரன், அடுத்தடுத்து தனுஷை வைத்து குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கினார். இந்த மூன்று படங்களுமே தெலுங்கு படங்களின் ரீமேக் ஆகும்.

24

இதையடுத்து சில ஆண்டுகள் படங்கள் எதுவும் இயக்காமல் இருந்த மித்ரன் ஆர் ஜவஹர், 6 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் மலையாளத்தில் வெளியாகி ஹிட் ஆன தட்டத்தின் மரயாது என்கிற மலையாள படத்தை தமிழில் மீண்டும் ஒரு காதல் கதை என்கிற பெயரில் ரீமேக் செய்தார். அப்படம் தோல்வி அடைந்ததை அடுத்து சில ஆண்டுகள் பட வாய்ப்பு இன்றி தவித்த மித்ரனுக்கு, மீண்டும் வாய்ப்பளித்தார் தனுஷ்.

இதையும் படியுங்கள்... மறுவெளியீட்டில் வசூல் சாதனை நிகழ்த்திய பாபா... படக்குழுவினருடன் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய ரஜினிகாந்த்

34

அவர்கள் கூட்டணி 12 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்த திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். சிம்பிளான கதையம்சத்துடன் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் எடுக்கப்பட்ட இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு ரூ.100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது.

44

திருச்சிற்றம்பலம் படத்துக்கு பின்னர் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் மீண்டும் தனுஷுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக செய்திகள் பரவி வந்த நிலையில், தற்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மித்ரன். அதன்படி நடிகர் மாதவன் நடிக்கும் புதிய படத்தை தான் மித்ரன் இயக்க உள்ளாராம். இப்படத்தை மீடியா ஒன் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே மாதவன் நடித்த மின்னலே, தம்பி போன்ற படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... கர்ப்பமான பின்னரே சித்தார்த்தை கரம்பிடித்தாரா கியாரா அத்வானி...? புது குண்டை தூக்கிப்போட்ட பாலிவுட் பிரபலம்

Read more Photos on
click me!

Recommended Stories