தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக கோலோச்சிய அட்லீ, லோகேஷ் கனகராஜ் ஆகியோர் பான் இந்தியா படத்தை இயக்க கிளம்பிய நிலையில், தற்போது நெல்சனும் அந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளார்.
நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். இதையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்கிற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்த நெல்சனுக்கு, அப்படம் ரிலீஸ் ஆகும் முன்னரே விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவான முதல் படம் என்பதால் அதற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை அப்படம் பூர்த்தி செய்யவில்லை. பீஸ்ட் படம் பெரியளவில் வரவவேற்பை பெறாதது மட்டுமின்றி கடுமையாக ட்ரோலும் செய்யப்பட்டது.
24
கம்பேக் கொடுத்த நெல்சன்
இந்த கேலி கிண்டல்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக அவர் கொடுத்த படம் தான் ஜெயிலர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு திரைக்கு வந்த ஜெயிலர் திரைப்படம் பான் இந்தியா அளவில் பட்டைய கிளப்பியது. ரஜினியின் நடிப்பு மட்டுமின்றி மோகன்லால், ஷிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோரின் கேமியோவும் பெரியளவில் பேசப்பட்டது. ஜெயிலர் 2 படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் மீண்டும் ரஜினிகாந்த் உடனே கூட்டணி அமைத்துள்ள நெல்சன், அவரை வைத்து ஜெயிலர் 2 படத்தை இயக்கி வருகிறார்.
34
ஜெயிலர் 2 ரிலீசுக்கு வெயிட்டிங்
ஜெயிலர் முதல் பாகத்தை காட்டிலும் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தில் ரஜினி உடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், எஸ்.ஜே.சூர்யா, மோகன்லால், ஷிவ ராஜ்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் 2 திரைப்படத்தை இந்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இதனிடையே நெல்சன் இயக்க உள்ள அடுத்த படம் குறித்த அப்டேட் கசிந்துள்ளது.
அதன்படி நெல்சன் அடுத்ததாக பான் இந்தியா படத்தை இயக்க உள்ளாராம். அப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் தான் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம். அப்படத்தின் படப்பிடிப்பு ஜெயிலர் 2 வெளியீட்டுக்கு பின்னர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குநர்களாக வலம் வந்த அட்லீ, லோகேஷ் கனகராஜ் ஆகியோர், தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாக இருக்கும் பான் இந்தியா படங்களை இயக்க கமிட்டாகி உள்ளனர். தற்போது அதே பாணியில் நெல்சனும் மற்றுமொரு பான் இந்தியா ஸ்டாரான ஜூனியர் என்.டி.ஆர் உடன் கூட்டணி அமைக்க இருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.