இந்நிலையில், அவர் கைவசம் இருந்து மற்றுமொரு திரைப்படம் கைநழுவி சென்றுள்ள தகவல் வெளியாகி உள்ளது. விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாரா உடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அதில் நடிகர் கவினை வைத்து ஊர்க்குருவி என்கிற திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. இப்படத்தை அருண் என்பவர் இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.