aditi shankar
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி, கடந்தாண்டு முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக களமிறங்கினார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார் அதிதி. விருமன் படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை அடுத்து நடிகை அதிதி ஷங்கருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின.
aditi shankar
அந்த வகையில் விருமன் படம் முடித்த கையோடு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்க கமிட் ஆனார் அதிதி. அப்படமும் கடந்த மாதம் திரைக்கு வந்து மாபெரும் வசூலை வாரிக்குவித்தது. இப்படி தொடர்ந்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த அதிதி, தற்போது நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் அதிதி. இப்படத்தை அஜித்தின் பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்குகிறார்.
இதையும் படியுங்கள்... நான் ஸ்டாப் வசூல் வேட்டை... பொன்னியின் செல்வன் சாதனையை முறியடித்து பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் ஜெயிலர்
இதுதவிர ராட்சசன் படத்தின் இயக்குனர் ராம்குமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் அதிதி. இப்படி அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்புகளால் திக்குமுக்காடிப் போய் உள்ள அதிதிக்கு அடுத்ததாக ஒரு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது. அது தான் சூர்யாவின் 43-வது திரைப்படம். சுதா கொங்கரா இயக்க உள்ள இப்படத்தில் நடிக்க அதிதி ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.