நைட் பார்ட்டியால் வந்த வினை... யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

Published : Jul 25, 2021, 08:19 PM ISTUpdated : Jul 25, 2021, 08:25 PM IST

நள்ளிரவு பார்ட்டியில் பங்கேற்ற யாஷிகா ஆனந்த் மதுபோதையில் இருந்தாரா?, விபத்திற்கான முழு காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

PREV
16
நைட் பார்ட்டியால் வந்த வினை... யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகையான யாஷிகா ஆனந்த் சாலை விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நேற்று இரவு யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழிகளுடன் கிழக்கு கடற்கரைச் சாலையில் டாடா ஹேரியர் காரில் பயணம் சென்றுள்ளார். 

26
Yashika anand

நள்ளிரவு பார்ட்டில் ஒன்றில் பங்கேற்ற யாஷிகா ஆனந்த் காரை படுவேகமாக ஓட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அவருடன் முன் இருக்கையில் தோழி வள்ளி செட்டி பவணி அமர்ந்துள்ளார், பின் இருக்கையில் நண்பர்களான சையது, ஆமீர் ஆகியோர் இருந்துள்ளனர். 

36
Yashika anand

யாஷிகா ஆனந்தின் கார் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூலேறிக்காடு என்ற பகுதி  அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் அவருடைய இரண்டு நண்பர்கள் உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த கோர விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான வள்ளிசெட்டி பவனி (28)  என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

46
Yashika anand

இந்த விபத்து குறித்து தகவல் கேள்விப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் யாஷிகா ஆனந்த் மீது அதிக வேகமாக கார் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தியதாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

56

நள்ளிரவு பார்ட்டியில் பங்கேற்ற யாஷிகா ஆனந்த் மதுபோதையில் இருந்தாரா?, விபத்திற்கான முழு காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
 

66

தற்போது தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள யாஷிகா ஆனந்தின் உடல் நிலை காலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அவருடைய தந்தை தெரிவித்திருந்தார். தற்போதைய நிலவரப்படி யாஷிகா ஆனந்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், சுயநினைவுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யாஷிகாவிற்கு விபத்து ஏற்பட்டத்தை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் பூரண நலம் பெற வேண்டுமென பிரார்த்தித்து வருகின்றனர். 

click me!

Recommended Stories