சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தையும் கடந்து தனக்கென தமிழ் சினிமாவில் தனி அடையாளம் பதித்துள்ளார் நடிகை வரலட்சுமி. முதல் திரைப்படமாக விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகமானவர்.
இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் கரகாட்ட கலைஞராக நடித்தார். இப்படம் இவருக்கு பல பாராட்டுக்களை பெற்று தந்தது.
அதன் பின்னர் விஷாலுடன் சண்டைக்கோழி, விஜய்யுடன் சர்கார் ஆகிய படங்களில் வில்லியாக நடித்து அனைவரையும் எதிர்பார்ப்பையும் வேற லெவலுக்கு பூர்த்தி செய்தார். இது அவருக்கு பெயரையும் பெற்றுத்தந்தது.
வரலட்சுமி சரத்குமாருக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதனிடையே வரலட்சுமி சரத்குமார் ஜொலி ஜொலிக்கும் பட்டுப்புடவையில் கொடுத்துள்ள பளீச் போஸ்களைப் பார்க்கும் ரசிகர்கள் ஆத்தாடி இதுதான் கல்யாண கலை என்பதா? அழகில் மிளிர்கிறாரே என புகழ்ந்து வருகின்றனர்.
உடல் எடையை கணிசமாக குறைத்து ஸ்லிம் லுக்கில் சிக்கென்று இருக்கும் வரலட்சுமி அம்சமான பட்டுப்புடவையில் அழகாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார்.