கொரோனா லாக்டவுன் ஆரம்பத்தில் இருந்தே பெரிய திரை, சின்னத்திரை என எவ்வித வித்தியாசமும் இன்றி பிரபலங்களின் நிச்சயதார்த்தம், திருமணம், குழந்தை பேறு என அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் அரங்கேறின.
கொரோனா லாக்டவுன் ஆரம்பத்தில் இருந்தே பெரிய திரை, சின்னத்திரை என எவ்வித வித்தியாசமும் இன்றி பிரபலங்களின் நிச்சயதார்த்தம், திருமணம், குழந்தை பேறு என அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் அரங்கேறின.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற நக்ஷத்ரா. அதன் பிறகு ‘வாணி ராணி’ சீரியலில் நடிகையாக அறிமுகமானார்.
சன் டி.வி.யில் குஷ்புவுடன் நடித்த லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக புகழ் பெற்றார். அதில் பஞ்சுமிட்டாய் என்ற அவருடைய பட்டப்பெயர் ரசிகர்களை கவர்ந்தது.
லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலைத் தொடர்ந்து ரோஜா, மின்னலே, நாயகி உள்ளிட்ட சீரியல்களில் நடித்த நக்ஷத்ரா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘திருமகள்’ சீரியலிலும் நடித்துள்ளார்.
வெள்ளித்திரையில் ‘சேட்டை’ படத்தில் பிரேம்ஜிக்கு காதலியாக நடித்திருப்பார். இவர்களுடைய பிரேக்கப்பை மையமாக வைத்து இந்த படத்தில் இடம் பெற்ற “நீ தானே ஒஸ்தி பெண்ணா” பாடல் சூப்பர் ஹிட்டானது. அதுமட்டுமின்றி ‘இரும்புகுதிரை’,‘வாயை மூடி பேசவும்’,‘மிஸ்டர் லோக்கல்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய வருங்கால கணவரான ராகவ் உடன் நக்ஷத்ரா நடத்திய அசத்தல் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலானது.
தற்போது தங்களுக்கு நிச்சயதார்த்தம் ஆன விஷயத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். உங்கள் அனைவரது வாழ்த்துக்களுக்கும் நன்றி என இருவரும் தங்களுடைய நிச்சயதார்த்த மோதிரத்தை கையில் வைத்திருப்பது போன்ற போட்டோவை பகிர்ந்துள்ளார்.