இரண்டு இடங்களில் சறுக்கிய “மாஸ்டர்”... ஒட்டுமொத்த வசூல் நிலவரம் இதோ...!

First Published Jan 26, 2021, 6:49 PM IST

மாஸ்டர் திரைப்படம் திரையிட்ட இடமெல்லாம் வெற்றி வாகை சூடினாலும் இரண்டு இடங்களில் மட்டும் பலத்த அடி வாங்கியுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு , ஸ்ரீமன், சஞ்சீவ் கௌரி கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி உலகமெங்கும் வெளியானது.
undefined
முதலில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்த தமிழக அரசு, அதன் பின்னர் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என அறிவிப்பை வெளியிட்டு தியேட்டர் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
undefined
ஆனால் முதல் மூன்று நாட்களிலேயே வசூலில் தட்டித்தூக்கிய மாஸ்டர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ரிலீஸ் ஆன அனைத்து மொழிகளிலும் பட்டையைக் கிளப்பி வருகிறது.
undefined
கடந்த வார இறுதி நிலவரப்படி “மாஸ்டர்” திரைப்படம் தான் உலக அளவில் முதலிடத்தில் கலெக்‌ஷன் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஹாலிவுட் படங்களை வசூலில் மாஸ்டர் திரைப்படம் பின்னுக்குத் தள்ளியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
undefined
தற்போது மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 14 நாட்கள் ஆகும் நிலையில் ஒட்டுமொத்த வசூல் குறித்து வெளியாகியுள்ள சாதனை தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
undefined
ஒட்டுமொத்தமாக தமிழத்தில் ரூ.110 கோடி, கர்நாடகாவில் - ரூ.18 கோடி, தெலங்கானா, ஆந்திராவில் ரூ.24 கோடி, கேரளாவில் ரூ.11.5 கோடி என வசூல் சாதனை படைத்துள்ளது.
undefined
மாஸ்டர் திரைப்படம் திரையிட்ட இடமெல்லாம் வெற்றி வாகை சூடினாலும் இரண்டு இடங்களில் மட்டும் பலத்த அடி வாங்கியுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
undefined
அதாவது வட இந்தியாவில் வெறும் 2 கோடி ரூபாயும், ஓவர்சீஸ் கலெக்‌ஷனில் வெறும் 36 கோடி ரூபாயும் மட்டுமே மாஸ்டர் திரைப்படம் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
undefined
click me!