யூடியூப் மூலம் மட்டும் நடிகை வனிதா விஜயகுமார் இத்தனை லட்சம் சம்பாதிக்கிறாரா? அவரே சொன்ன ஷாக் தகவல்

First Published | Jul 31, 2023, 4:06 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன நடிகை வனிதா விஜயகுமார், யூடியூப் மூலம் தான் சம்பாதிக்கும் வருமானத்தை பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, சினிமாவிலும் ஹீரோயினாக நடித்துள்ளார். இதையடுத்து திருமணம் செய்துகொண்ட இவர் சில ஆண்டுகள் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். அந்த சமயத்தில் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு முதல் கணவரை விவாகரத்து செய்து பிரிந்த வனிதா, பின்னர் இரண்டாம் திருமணம் செய்துகொண்டு, அதுவும் செட் ஆகாததால், இரண்டாவது கணவரையும் விவாகரத்து செய்துவிட்டார்.

இதையடுத்து தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி மகள்களுடன் தனியாக வசித்து வந்த வனிதா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் குக் வித் கோமாளி என்கிற சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தி டைட்டிலையும் தட்டித்தூக்கினார்.

இதையும் படியுங்கள்... ஷூட்டிங் பண்ணும்போதே இது பிளாப் ஆகிடும்னு தெரியும்... விஜய் படத்தை ஓப்பனாக போட்டுத்தாக்கிய தமன்னா

Tap to resize

இதையடுத்து கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டு பரபரப்பை ஏற்படுத்திய வனிதா, பின்னர் ஒருசில மாதங்களிலேயே அவரை துரத்திவிட்டார். பீட்டர் பால் உடனான பிரிவுக்கு பின்னர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் விதவிதமான சமையல் வீடியோக்களை பதிவிட்டு வந்த வனிதாவுக்கு குறுகிய காலத்திலேயே லட்சக்கணக்கில் பாலோவர்களை பெற்றார்.

தற்போது அவர் நடிப்பில் அநீதி திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையொட்டி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு யூடியூப் சேனல் மூலம் கிடைக்கும் வருமானத்தை வெளியிட்டுள்ளார். அதன்படி, தொடர்ச்சியாக வீடியோக்களை போட்டால் மாதம் ரூ.1 முதல் ஒன்றரை லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்றும், அவ்வப்போது வீடியோ பதிவிட்டால் மாசம் ரூ.5 முதல் 10 ஆயிரம் மட்டுமே கிடைக்கும் என கூறி இருக்கிறார். முன்பு தொடர்ச்சியாக வீடியோ போட்டு வந்த வனிதா, தற்போது சினிமாவில் பிசியானதால் அவ்வப்போது மட்டும் வீடியோ பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... சபாஷ்... ஆண்களுக்கு செம்ம நோஸ் கட் கொடுத்த ரேணுகா..! ஜீவானந்தத்துக்கு எதிராக குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான்!

Latest Videos

click me!