தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் விஜய், அஜித் இருவருடனும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். இருவரது தீவிர ரசிகையான திரிஷா, இன்று வெளியாகி இருக்கும் அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய 2 படங்களின் முதல் ஷோவை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து ரசித்துள்ளார்.
சென்னையில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் இந்த இரண்டு படங்களையும் பார்த்துள்ளார் திரிஷா. அவருடன் ஏஜிஎஸ் நிறுவனத்தை சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தியும் சேர்ந்து இரு படங்களில் FDFS ஷோவை பார்த்து ரசித்துள்ளார். இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் டுவிட்டரில் வைரலாகி வருகிறது.
இதில் அர்ச்சனா கல்பாத்தி விஜய்யின் பிகில் படத்தை தயாரித்தவர் ஆவார். விஜய்யின் தீவிர ரசிகையான அவர் வாரிசு என்கிற டைட்டில் இடம்பெற்றுள்ள டீசர்ட்டை அணிந்து வந்து படத்தை பார்த்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள திரிஷா, இது தல - தளபதி பொங்கல் என குறிப்பிட்டுள்ளார்.
33
நடிகை திரிஷா அடுத்ததாக விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி உள்ளார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கடைசியாக ஆதி படத்தில் இணைந்து நடித்திருந்த விஜய் - திரிஷா ஜோடி தற்போது 18 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.