தமிழ் சினிமாவில் தன்னுடைய 14 வயதிலேயே 'இனிமே இப்படித்தான்' படத்தின் மூலம் நடிப்பில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். முதல் படத்திலேயே இவருக்கு ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், சந்தானத்துடன் சேர்ந்து டான்ஸ் ஆடும் வாய்ப்பை கைப்பற்றினார்.
இப்படம் நல்ல வரவேற்பை பெற்றாலும், அடல்ட் காமெடி படம் என்பதால் சில விமர்சனங்களுக்கும் ஆளானது. இதைத்தொடர்ந்து நிலையான வாய்ப்பை கைப்பற்ற முடியாமல் திண்டாடி வந்த யாஷிகா, அதிரடியாக தன்னுடைய 18 வயதில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிக்குள் நுழைந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர், இவர் எதிர்பார்த்தது போலவே இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. அந்த வகையில் ஜாம்பி, மூக்குத்தி அம்மன், பெஸ்டி போன்ற அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகிய நடித்தார்.
இடுப்பு மற்றும் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டு சுமார் ஆறு மாத காலத்திற்கு மேலாக படுக்கையிலேயே இருந்த யாஷிகா, தற்போது மெல்ல மெல்ல பழைய நிலைக்கு திரும்பி மீண்டும் பட பணிகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அவ்வப்போது... தன்னுடைய போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் யாஷிகா, தற்போது கவர்ச்சிகரமான சில செல்பி புகைப்படங்களை வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மிகவும் டைட்டான உள்ளாடை போன்ற ஆடையில்.... திகட்ட திகட்ட கவர்ச்சியோடு யாஷிகா வெளியிட்டுள்ள இந்த செல்பி புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.