Trisha : நடிகை திரிஷாவுக்கு வந்த திடீர் அரசியல் ஆசை... எந்த கட்சியில் இணையப்போகிறார் தெரியுமா?

Published : Jun 19, 2022, 08:11 AM IST

Trisha : விரைவில் நடிகை திரிஷா அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருவதால் அவரது ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

PREV
14
Trisha : நடிகை திரிஷாவுக்கு வந்த திடீர் அரசியல் ஆசை... எந்த கட்சியில் இணையப்போகிறார் தெரியுமா?

தென்னிந்திய திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சக்சஸ்புல் ஹீரோயினாக வலம் வருபவர் திரிஷா. தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக இருக்கும் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என அனைவருடன் நடித்த பெருமை இவருக்கு உண்டு. 40 வயதை நெருங்கும் திரிஷா, இன்றளவும் தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

24

இவர் கைவசம் சதுரங்க வேட்டை 2, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், ஜீத்து ஜோசப் இயக்கும் ராம், தி ரோட், ராங்கி மற்றும் பிருந்தா என்கிற வெப் தொடர் ஆகியவற்றை கைவசம் வைத்துள்ளார் திரிஷா. அண்மையில் நடிகை நயன்தாரா திருமணம் செய்துகொண்டதால், அடுத்து உங்களுக்கு எப்போ கல்யாணம் என ரசிகர்கள் திரிஷாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

34

இதன் காரணமாக விரைவில் திருமண செய்தியை நடிகை திரிஷா வெளியிடுவார் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, அவரின் புதிய முடிவு ஒன்று பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. அது அவரது அரசியல் எண்ட்ரி தான். விரைவில் நடிகை திரிஷா அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

44

மேலும் அவர் தேசிய கட்சியான காங்கிரஸில் இணைந்து பணியாற்ற திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை அவர் அரசியலில் எண்ட்ரி கொடுத்தால் தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா அல்லது முழுக்கு போடுவாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து விரைவில் அவரே உரிய விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்.... Thalapathy 67 : தளபதி 67 படம் மூலம் புதிய அவதாரம் எடுக்க உள்ள லோகேஷ் கனகராஜ்... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

Read more Photos on
click me!

Recommended Stories