விஜய் சேதுபதிக்கு முத்தமிட்டு நன்றி சொன்ன கமல்..வெளியான நெகிழ்ச்சி போட்டோஸ்!

Kanmani P   | Asianet News
Published : Jun 18, 2022, 07:45 PM IST

விக்ரம் 300 கோடி பாக்ஸ் ஆஃபீஸை வெகு விரைவில் தொட்டு மாபெரும் கொண்டாட்டத்தில் உள்ளது. இதன் பொருட்டு படக்குழுவினரின் மகிழ்ச்சி கொண்டாட்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது.

PREV
13
விஜய் சேதுபதிக்கு முத்தமிட்டு நன்றி சொன்ன கமல்..வெளியான நெகிழ்ச்சி போட்டோஸ்!
vikram update

கமல்ஹாசனின் விக்ரம் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படம் பெரும் வியாபாரம் செய்து 15வது நாளிலும் பாக்ஸ் ஆபிஸில் வலுவாக இருந்தது. உலகம் முழுவதும் பிரமாண்டமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் இப்படம் இரண்டு வாரங்களில் ரூ.150 கோடி வசூல் செய்தது.

23
vikram update

விக்ரம், லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய ஒரு ஹை ஆக்ஷன் என்டர்டெய்னர் . இப்படத்தில் கமல்ஹாசன், ஃபகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். அவரது ஐந்து நிமிட கேமியோ படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். காளிதாஸ் ஜெயராம், நரேன், வசந்தி, காயத்ரி மற்றும் சந்தான பாரதி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

33
vikram update

உலகம் முழுவதும் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் விக்ரம் குறித்து நேற்று வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக விநியோகஸ்தர் உதயநிதி அழ டைம் தமிழ் மூவி விக்ரம் தான் என கூறி மகிழ்ந்திருந்தார். இந்நிலையில் விஜய் சேதுபதி, அனிரூத், உதயநிதி, லோகேஷ் உள்ளிட்டோரை முத்தமிட்டு நன்றி தெரிவித்துள்ளார் கமல். 

Read more Photos on
click me!

Recommended Stories