Thalapathy 67 : தளபதி 67 படம் மூலம் புதிய அவதாரம் எடுக்க உள்ள லோகேஷ் கனகராஜ்... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

Published : Jun 19, 2022, 07:39 AM IST

Thalapathy 67 : தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராக உயர்ந்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார்.

PREV
14
Thalapathy 67 : தளபதி 67 படம் மூலம் புதிய அவதாரம் எடுக்க உள்ள லோகேஷ் கனகராஜ்... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், அண்மையில் இயக்கிய விக்ரம் படமும் மாபெரும் வெற்றியை ருசித்தது. இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் நாயகனாக நடித்திருந்தார். மேலும் பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், செம்பன் வினோத், விஜய் சேதுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.

24

உலகமெங்கும் கடந்த ஜூன் 3-ந் தேதி 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்ட இப்படம் இரண்டு வாரங்களைக் கடந்தும் மவுசு குறையாமல் வெற்றிநடை போட்டு வருகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது. இதுவரை விக்ரம் படம் உலகளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

34

இவ்வாறு அடுத்தடுத்து வெற்றிப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராக உயர்ந்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளது.

44

இந்நிலையில், இப்படம் குறித்த மேலும் ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தளபதி 67 படம் மூலம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுக்க உள்ளாராம். இப்படத்தில் அவர் இணை தயாரிப்பாளராக பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்தின் மூலம் கிடைத்த வருமானத்தை அவர் தளபதி 67 படத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளாராம்.

இதையும் படியுங்கள்.... Jailer movie : ஜெயிலர் பட போஸ்டரும் காப்பியா... ஆதாரத்துடன் நெல்சனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Read more Photos on
click me!

Recommended Stories