கோலிவுட்டின் புது காதல் ஜோடி; எல்சியூ மாப்பிள்ளை உடன் தன்யா ரவிச்சந்திரனுக்கு திருமணம்

Published : Jul 16, 2025, 10:10 AM IST

நடிகை தன்யா ரவிச்சந்திரன் எல்சியூவில் பணியாற்றும் பிரபலம் ஒருவரை காதல் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்து உள்ளார்.

PREV
14
Tanya Ravichandran Engagement

சினிமா பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்துகொள்வது வழக்கமான ஒன்று தான். கோலிவுட்டில் அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா, ராதிகா - சரத்குமார், விக்னேஷ் சிவன் - நயன்தாரா, ஆதி - நிக்கி கல்ராணி, கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் என ஏராளமான பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் லேட்டஸ்டாக ஒரு ஜோடி இணைந்துள்ளது. நடிகை தன்யா ரவிச்சந்திரன் தன்னுடைய காதலன் பற்றி முதன்முறையாக அறிவித்துள்ளார். தனது நிச்சயதார்த்த புகைப்படத்தை பதிவிட்டு தனக்கு திருமணமாக உள்ள தகவலையும் வெளியிட்டுள்ளார் தன்யா ரவிச்சந்திரன்.

24
யார் இந்த கெளதம் ஜார்ஜ்?

அவர் கெளதம் ஜார்ஜ் என்கிற ஒளிப்பதிவாளரை தான் திருமணம் செய்துகொள்ள உள்ளாராம். இவர் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த அனபெல் சேதுபதி மற்றும் பாவனா நடித்த தி டோர் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் பென்ஸ் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார் கெளதம் ஜார்ஜ். எல்சியூ படமான இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் நிவின் பாலி வில்லனாக நடித்து வருகிறார். பென்ஸ் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

34
தன்யா ரவிச்சந்திரன் நிச்சயதார்த்தம்

கெளதம் ஜார்ஜை காதலித்து வந்த நடிகை தன்யா ரவிச்சந்திரன், குடும்பத்தினர் சம்மதத்தோடு அவரை கரம்பிடிக்க தயாராகி வருகிறார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் தற்போது நடந்து முடிந்துள்ளது. அப்போது கெளதம் ஜார்ஜ் உடன் லிப் கிஸ் அடித்தபடி இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள தன்யா, ஒரு முத்தம், ஒரு வாக்குறுதிக்கு தான் ஒவ்வொரு ஃபிரேமும் வழிவகுக்கிறது. என்றென்றும்.. எப்போதும் என கெளதம் ஜார்ஜின் பெயரை குறிப்பிட்டு ஹார்டின் எமோஜியையும் பதிவிட்டுள்ளார் தன்யா. அவரின் இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

44
தன்யா ரவிச்சந்திரன் திரைப்பயணம்

நடிகை தன்யா ரவிச்சந்திரன் தமிழில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான பலே வெள்ளையத் தேவா திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து ராதா மோகன் இயக்கிய பிருந்தாவனம் படத்தில் நடித்த அவர், கருப்பன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார். பின்னர் உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி, சிபிராஜ் உடன் மாயோன், ரவிமோகனின் அகிலன், அர்ஜுன் தாஸ் உடன் ரசவாதி போன்ற படங்களில் நடித்துள்ள தன்யா ரவிச்சந்திரன் தற்போது ரெட்ட தல என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் தன்யா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் சிரஞ்சீவி உடன் காட்ஃபாதர் என்கிற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுதவிர கிருத்திகா உதயநிதி இயக்கிய பேப்பர் ராக்கெட் என்கிற வெப் தொடரிலும் ஹீரோயினாக நடித்திருந்தார் தன்யா. இவரின் திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories