உடலோடு ஒட்டி உறவாடும் ஸ்கின் கலர் உடையில்.... தகதகவென மின்னும் தமன்னா... ஹாட் கிளிக்ஸ்...!

First Published | Jul 6, 2021, 4:03 PM IST

செம்ம ஹாட்டான உடைகளில் வரும் தமன்னா அதில் சில போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு வருகிறார். 

தெலுங்கு, இந்தி சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த தமன்னா. தமிழில் அஜித், விஜய் உட்பட முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்டுவிட்டார்.
அதேபோல் பவன் கல்யாண், மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், நாகசைதன்யா, ஜூனியர் என்.டி.ஆர் எனப் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டார்.
Tap to resize

பாகுபலி படத்தில் தமன்னா நடித்த அவந்திகா கேரக்டர் அவரது கேரியரையே மாற்றும் படமாக அமைந்தது. சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமன்னா நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஹோம்லி, கிளாமர் என இரண்டையும் கலந்து கட்டி என்ன தான் நவரசத்தையும் வெளிப்படுத்தினாலும் தமன்னாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் அமையவில்லை.
அதன் பின்னர் வெப் சீரிஸ், டாக் ஷோ என ஓடிடி பக்கம் ஒதுங்கிவிட்டார். தமிழில் சன் தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ள மாஸ்டர் செப் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
அதேபோல் தெலுங்கு வெர்ஷனை தொகுத்து வழங்கப்போவது தமன்னா என்பது பெரும்பாலானோர் அறிந்த செய்தி. இதற்கான ஷூட்டிங் படு தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சிக்காக செம்ம ஹாட்டான உடைகளில் வரும் தமன்னா அதில் சில போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு வருகிறார்.
அப்படி ஸ்கின் கலரில் சும்மா ஜிகு ஜிகுவென இருக்கும் கவுன் உடையில் மிடுக்காக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார் தமன்னா.
உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் ஸ்கின் கலர் டிரஸைப் பார்க்கும் போது டி.வி. நிகழ்ச்சிக்கு இவ்வளவு கிளாமரா? என ரசிகர்கள் வாய்பிளக்கின்றனர்.
மெழுகு பொம்மை போல் இருக்கும் தமன்னாவிற்கு இந்த வெள்ளி நிற உடை செம்ம அழகாக பொருந்தி தகதகவென ஜொலிப்பதால் லைக்குகள் குவித்து வருகிறது.

Latest Videos

click me!