விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் சீரியல்களில் ஒன்றாக “பாண்டியன் ஸ்டோர்ஸ்” உள்ளது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் ரங்கநாதன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.
அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதை மையமாக கொண்ட இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. தற்போது இந்த தொடர் 650 வது எபிசோடை நோக்கி வெற்றிகரமாக பயணித்து கொண்டு இருக்கிறது.
இந்த தொடரில் ஆனந்தம் படத்தில் வரும் அண்ணன் கேரக்டரான மம்மூட்டி அளவிற்கு பிரபலமானவர் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்டாலின். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மூலமாக பிரபலமான இவர், அதன் பின்னர் பல்வேறு தொடர்களில் நடித்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அவருக்கு அதிக பிரபலத்தை பெற்றுத் தந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்களின் உண்மையான குடும்பத்தினர் குறித்து அறிந்து கொள்வதில் எப்போதும் அதன் ரசிகர்களுக்கு தனி ஆர்வம் உண்டு. அந்த வகையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன் கதாபாத்திரத்தி நடித்து வரும் ஸ்டாலினின் பேமிலி போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் ரசிகர்களோ மூர்த்தி அண்ணனுக்கு இவ்வளவு பெரிய பசங்க இருக்காங்களா? என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.