Published : Feb 11, 2025, 08:20 PM ISTUpdated : Feb 11, 2025, 08:37 PM IST
நடிகை சௌந்தர்யா உயிரிழக்கும் போது 2 மாதம் கர்ப்பமாக இருந்ததாகவும், பெரிய நடிகரின் பண்ணை வீட்டிற்கு சென்ற அவருக்கு கிலோ கணக்கில் தங்க நகை அணிந்து அழகு பார்த்ததாகவும் பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
சௌந்தர்யா பற்றி மூத்த பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா. இவருடைய இயற்பெயர் சௌம்யா சத்யநாராயணா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சௌந்தர்யா பற்றி மூத்த பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.
26
யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டி
யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: கர்நாடகாவைச் சேர்ந்தவர் தான் சௌந்தர்யா. அழகு என்றால் அவ்வளவு அழகு. அவரைப் பார்க்கும் எல்லோருமே திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவார்கள். யாருக்கு தான் அவரை பிடிக்காது என்று சொல்லும் அளவிற்கு நடிகர்கள், அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என்று எல்லோருக்குமே அவரைக் கண்டாலே பிடிக்கும். அந்தளவிற்கு அழகான நடிகை.
கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்த பிறகு இயக்குநர் ஆர்வி உதயகுமார் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வந்த பொன்னுமணி படத்தில் நடித்தார். இதுதான் தமிழில் அவர் அறிமுகமான முதல் படம். இந்தப் படத்திற்கு முன் சௌந்தர்யாவை பார்த்த உடனே கார்த்திக் கால்ஷீட் கொடுத்துவிட்டாராம். இந்தப் படம் கொடுத்த வரவேற்பிற்கு பிறகு முத்து காளை, டியர் சன் மருது, சேனாதிபதி, அருணாச்சலம், காதலா காதலா, படையப்பா, தவசி, சொக்கத்தங்கம் என்று பல படங்களில் நடித்துள்ளார் தமிழில் அவர் கடைசியாக நடித்த படம் சொக்கதங்கம். ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், கார்த்திக் என்று மாஸ் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தார்.
46
சினிமாவில் பிஸி:
சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது பிடித்த நடிகர்கள், பெரிய பெரிய நடிகர்கள் என்று எல்லோருமே அவரை பயன்படுத்திக் கொண்டு தான் இருந்தாங்க. அப்படி அந்த பெரிய நடிகருக்கு பிடித்து போக அவருடன் ஒரு சில படங்களில் நடித்த நிலையில் அவரை தன்னுடைய பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார். அங்கு சௌந்தர்யாவின் அழகில் மயங்கிய அந்த பெரிய நடிகர் கிலோ கணக்கில் தங்க நகைகளை போட்டு அவரை அழகு பார்த்துள்ளார். அதோடு லட்சக்கணக்கில் காசு, பணம் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் தான் ஒரு கட்சியில் இணைந்திருந்த சௌந்தர்யா தேர்தல் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்து வைத்த இயக்குநர் ஆர் வி உதயகுமாருக்கு போன் போட்டு நன்றி தெரிவித்திருக்கிறார். உங்களால் தான் நான் இன்று உச்சத்தில் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். எதற்காக எனக்கு நன்றி என்று அவர் கேட்டதற்கு திடீரென்று உங்களுக்கு சொல்ல வேண்டும் என்று தோன்றியது அதனால் தான் என்று கூறியிருக்கிறார்.
66
ஹெலிகாப்டர் விபத்து:
அப்போது திடீரென்று அவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் சௌந்தர்யா அந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு 27 வயது தான் ஆச்சு. அப்போது அவர் 2 மாதம் கர்ப்பமாக இருந்தார். கடைசியாக சௌந்தர்யா உடன் நடித்த அந்த நடிகரும் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். ஆனால், சௌந்தர்யா மட்டும் இன்று உயிருடன் இருந்திருந்தால் அவர் கட்சியின் எம்பியாக வந்திருப்பார். அந்தளவிற்கு அவருக்கு செல்வாக்கு இருந்தது என்று அவர் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: இது முழுக்க முழுக்க பத்திரிகையாளரின் கருத்தே தவிர, நாங்கள் எந்த ஒரு சொந்த கருத்தையும் திணித்து இந்த செய்தியை பதிவிடவில்லை.