Published : Mar 13, 2025, 01:21 PM ISTUpdated : Mar 13, 2025, 01:26 PM IST
நடிகை சினேகாவிற்கு அரிய பிரச்சனை இருப்பதாக அவரே கூறியுள்ள நிலையில்.. அதிலிருந்து தப்பித்தது தான் மட்டும் தான் என்று நடிகரும், அவரது கணவருமான பிரசன்னா கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்த ஜோடிகளில் சினேகா மற்றும் பிரசன்னா ஜோடியும் ஒன்று. கடந்த 2012 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். என்னவளே என்ற படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சினேகா. இந்தப் படத்தை தொடர்ந்து ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், ஏப்ரல் மாதத்தில், வசீகரா என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
27
பிசி நடிகையாக வலம் வரும் சினேகா
2000 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் வரிசையாக பல படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சி லுக்கில் வலம் வந்த நடிகைகளின் மத்தியில் ஹோம்லி லுக்கில் நடித்து பிரபலமான ஒரு சில நடிகைகளின் இவரும் ஒருவர். பெரும்பாலான படங்களில் சுடிதார் மற்றும் புடவையில் நடித்திருப்பார்.
அதே போல் பல்லாங் குழியில் வட்டம் பார்த்தேன், ஒவ்வொரு பூக்களுமே, ஒரு முறை சொல்வாயா, சொல்லத்தான் நினைக்கிறன், 10 குள்ள நம்பர் ஒன்னு சொல்லு, போன்ற இவர் நடித்த பாடல்கள் சினேகா ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட் பாடல்கள் ஆகும்.
47
காதலித்து திருமணம் செய்த சினேகா - பிரசன்னா ஜோடி:
முன்னணி நடிகையாக இருக்கும் போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சினேகா, 2020 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வந்த பட்டாஸ் படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே... இவர் கர்ப்பமான நிலையில், பின்னர் இந்த படத்தில் நடித்து முடித்த பின்னர் குழந்தையை கவனித்துக்கொள்வதற்காக சினிமாவில் இருந்து விலகியே இருந்தார்.
கடந்த ஆண்டு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ரிலீஸ் ஆன 'கோட்' படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதே போல் கடந்த மாதம் திரைக்கு வந்த டிராகன் படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
67
கிண்டலாக கமெண்ட் செய்த பிரசன்னா
இந்நிலையில் சினேகா தன்னுடைய கணவன் சேர்ந்து, கொடுத்த பழைய பேட்டி ஒன்றில், தனக்கு இருக்கும் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அதில், சினிமா தனக்கு ஓசிடி என்ற பிரச்சனை இருப்பதாக கூறி உள்ளார். இதற்க்கு கமெண்ட் அடிக்கும் விதமாக ஆமாம் வீட்டையே 3 முறை மாற்றி இருக்காங்க அப்படினா பாத்துக்கோங்க. அதே போல அவங்க மாத்தாம இருக்குற ஒரே விஷயம் தான் தான் அப்படினு கிண்டலாகவும் பேசி உள்ளார்.
77
சினேகாவின் ஓசிடி பிரச்சனை:
மேலும் எனக்கு எப்போமே வீடு சுத்தமாக இருக்க வேண்டும். அதுவும், கிச்சன் கிளீனா இருக்கனும் அப்படினு எதிர்பார்ப்பேன். இந்த ஓசிடி பிரச்சனை அரிதான பிரச்சனையாக இருந்தாலும்... இதனால் பெரிதாக அச்சப்பட தேவை இல்லை. எல்லா விஷயமும் சுத்தமாக இருக்க வேண்டும், சரியாக இருக்க வேண்டும் என இந்த பிரச்சனை உள்ளவர்கள் எதிரிபார்ப்பார்கள்.