50 வயதிலும் ராணி போல் ஜம்முனு வாழும் சிம்ரன்... அவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Published : Apr 04, 2026, 04:20 PM IST

நடிகை சிம்ரன் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அவரின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

PREV
14
Simran Net Worth

தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த நடிகைகளைக் காட்டிலும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தான் அதிகளவில் கோலோச்சி உள்ளனர். அந்த பட்டியலில் தவிர்க்கவே முடியாத பெயர் சிம்ரன். 1976ம் ஆண்டு ஏப்ரல் 4ந் தேதி அன்று பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த ரிஷிபாலா சினிமாவுக்காக தன்னுடைய பெயரை "சிம்ரன்" என மாற்றிக் கொண்டார். பின்னாளில் அதுவே அவரது அடையாளமாக மாறிப்போனது. ரசிகர்கள் அவரை செல்லமாக "இடையழகி" என்று அழைத்தனர். அந்த பட்டத்தை இன்று வரை வேறு எந்த நடிகையாலும் பெற முடியவில்லை.

24
சிம்ரன் அறிமுகம்

இந்தி, மலையாளம் வழியாக சினிமாவில் அடியெடுத்து வைத்த சிம்ரன், 1997இல் தமிழில் அறிமுகமானார். முதல் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், விரைவிலேயே தமிழ்த் திரையில் தனக்கென ஒரு இடத்தை உறுதி செய்துகொண்டார். விஜய், சூர்யா, அஜித், கமல் என அன்றைய அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தவர் சிம்ரன். அவர் நீண்ட நாட்களாக ஜோடி சேராமல் இருந்த ஹீரோ என்றால் அது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான். அந்த ஆசையும் பேட்ட படத்தின் மூலம் நிறைவேறியது.

வட இந்தியாவில் வளர்ந்தாலும், சேலையும் தாவணியும் கட்டிக்கொண்டால் சிம்ரன் மதுரையிலோ திருச்சியிலோ பிறந்தவர் போலவே காட்சியளிப்பார். அந்த இயல்பான தமிழ்ப் பெண்ணின் சாயல், மூக்குத்தியின் மினுமினுப்பு, கண்களில் கோபத்தின் தீ, இதயத்தில் தாய்மையின் ஈரம். இவை சிம்ரனை ஒரு தனித்துவமான நாயகியாக காட்டியது. கிளாமர் வேடமாக இருந்தாலும் சரி, ஹோம்லி வேடமாக இருந்தாலும் சரி இரண்டுக்குமே கச்சிதமாக பொருந்தக்கூடிய ஹீரோயின் என்றால் அது சிம்ரன் தான்.

34
சிம்ரன் திரைப்பயணம்

வாலியில் காட்டிய உணர்ச்சி ஆழம், வாரணம் ஆயிரத்தில் தாயின் அன்பு, துள்ளாத மனமும் துள்ளும்-இல் ருக்மணியின் நகைச்சுவை. இவை வெறும் நடிப்பல்ல, அனுபவம். கதைகளைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் சிம்ரன் எப்போதும் கவனமாக இருந்தார். ஒவ்வொரு படமும் ஒரு புதிய கோணம்; ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு புதிய அனுபவம். கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் கூட இலங்கை பெண்ணாக நடித்திருந்தார் என்று சொல்வதை விட வாழ்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரத்திற்கு காசிதமாக பொருந்தி இருந்தார்.

44
சிம்ரன் சொத்து மதிப்பு

பாடல் காட்சிகளில் சிம்ரனின் நடனம் வேறலெவலில் இருக்கும். கிளாசிக்கல் முதல் வெஸ்டர்ன் வரை, ரொமாண்டிக் முதல் ஐட்டம் சாங் வரை, எல்லா வகை நடனங்களிலும் தனக்கென ஒரு முத்திரையை பதித்தார். சில பாடல்கள் இன்றும் தமிழ் ரசிகர்களின் நினைவலைகளில் ஆடிக்கொண்டே இருக்கின்றன. ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு நடனத்தில் புயலாக இருந்தார் சிம்ரன்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிம்ரனுக்கு, சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இன்று 50வது பிறந்தநாளை அவர் கொண்டாடுகிறார். ஒரு நடிகையின் வெற்றி வெறும் படங்களால் அளவிடப்படுவதில்லை. ரசிகர்களின் நெஞ்சில் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறார் என்பதில் அளவிடப்படுகிறது. அந்த அளவுகோலில் சிம்ரன் என்றென்றும் முன்னிலையில் நிற்கிறார். அவரின் சொத்து மதிப்பு ரூ.45 முதல் 50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவர் சென்னையில் சொந்தமாக ரெஸ்டாரண்ட் ஒன்றையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories