Shakeela Undergoes Surgery : பிரபல நடிகை ஷகிலா, அளவுக்கு அதிகமாக மொபைல் பயன்படுத்தியதால் கழுத்தில் தீவிர அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். அவர், தனது அனுபவம் மூலம் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுனு சொல்வாங்க. இப்போதைய டிஜிட்டல் உலகத்துல ஸ்மார்ட்போன் எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான அங்கமாகிடுச்சு. ஆனா, இதே மொபைல் போனை அளவுக்கு அதிகமா, தவறான பொசிஷன்ல (Improper Posture) பயன்படுத்தியதால தென்னிந்தியாவின் பிரபல நடிகை ஷகிலாவுக்கு கழுத்தில் ஒரு பெரிய அறுவை சிகிச்சை நடந்திருக்கு.
சமீபத்தில் கழுத்தில் அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நடிகை ஷகிலா, தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோ வெளியிட்டு இந்த அதிர்ச்சி தகவலைப் பகிர்ந்திருக்கிறார். மணிக்கணக்கில் மொபைலில் கேம் விளையாடியதாலும், ரீல்ஸ் பார்த்ததாலும் தனக்கு ஏற்பட்ட மோசமான விளைவு குறித்து ரசிகர்களுக்கு வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு, கழுத்தில் சப்போர்ட்டுக்காக நெக் காலர் அணிந்திருக்கும் ஷகிலா, தனக்கு ஏற்பட்ட கஷ்டத்தை விவரித்துள்ளார். இப்போதைக்கு படுக்கையிலிருந்து எழுந்திருக்க, உட்கார, சாப்பிடக்கூட உதவியாளர் உதவி தேவைப்படுவதாக அவரே சொல்லியிருக்கிறார்.
36
4 மணிநேரம் கேம் ஆடுவேன்
'நான் பெட்ல ஒருபக்கமா சரிஞ்சு படுத்துக்கிட்டு, தொடர்ந்து 4 மணி நேரம் மொபைல்ல கேம் விளையாடுவேன். நடுவுல டீ, காபி குடிக்க மட்டும் தான் எழுந்திருப்பேன். அப்புறம் மறுபடியும் வந்து அதே கேமை கண்டினியூ பண்ணுவேன். அதுக்கப்புறம் யூடியூப், இன்ஸ்டாகிராம்ல மணிக்கணக்கா ரீல்ஸ் பார்ப்பேன். இப்படி தவறான பொசிஷன்ல தொடர்ந்து மொபைல் யூஸ் பண்ணுனதால, என் கழுத்துல இருக்குற முக்கியமான நரம்புகள் கடுமையா பாதிக்கப்பட்டு, ஆபரேஷன் செய்யுற நிலைமை வந்துடுச்சு.'
ரசிகர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நேரடி எச்சரிக்கை
தனக்கு ஏற்பட்ட இந்த கசப்பான அனுபவத்திற்குப் பிறகு, ஷகிலா மக்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு முக்கியமான ஆலோசனையை வழங்கியுள்ளார். 'மொபைல் ரொம்ப உபயோகமான கருவிதான். ஆனா, அதை தேவைக்கு அதிகமா பயன்படுத்தாதீங்க. குழந்தைகளுக்கு எந்தக் காரணத்துக்காகவும் மொபைல் கொடுக்காதீங்க. தேவையில்லாத வீடியோக்களைப் பார்த்து நேரத்தையும், ஆரோக்கியத்தையும் கெடுத்துக்காதீங்க. இல்லைன்னா என்னைப் போல ரூ. 3 லட்சம் பணத்தை இழக்குறதோட, தாங்க முடியாத உடல் வலியையும் அனுபவிக்க வேண்டியிருக்கும்' என்று அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
56
ஷகிலாவுக்கு மவுசு
ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூரில் பிறந்தவர் ஷகிலா சி பேகம். தென்னிந்திய சினிமாவில் ஒரு பெரிய அலையை உருவாக்கியவர். 2000-ம் ஆண்டில் வெளியான, ஆர்.ஜே. பிரசாத் இயக்கிய ‘கின்னரத்ரதும்பிகள்’ திரைப்படம் வெறும் 12 லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு, சுமார் 4 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. இந்தப் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் ‘ஷகிலாவுக்கு மவுசு’ தொடங்கியது.
66
கலெக்ஷன் அள்ளிய ஷகிலா படங்கள்
அந்தக் காலகட்டத்தில், முன்னணி ஹீரோக்களின் படங்களை விட ஷகிலா நடித்த படங்கள்தான் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்தன. மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாவிலும் இவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மோகன்லாலின் 'சோட்டா மும்பை', பிருத்விராஜ் நடித்த 'தேஜா பாய் & ஃபேமிலி', தமிழில் 'மறுமலர்ச்சி', 'அழகிய தமிழ் மகன்', 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' மற்றும் கன்னடத்தில் 'மோனாலிசா' உள்ளிட்ட பல பிரபலமான படங்களில் இவர் நடித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.