Published : Aug 12, 2025, 02:10 PM ISTUpdated : Aug 12, 2025, 02:16 PM IST
ரீல்ஸ் பிரபலம் "வாட்டர் மெலன் ஸ்டார்" திவாகர் சமீபத்திய பேட்டிகளில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததால், நடிகை ஷகிலா அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
“வாட்டர் மெலன் ஸ்டார்” என்று அழைக்கப்படும் திவாகர், ரீல்ஸ் மூலம் பிரபலமானவர், நடிகர் சூர்யா கஜினி திரைப்படத்தில் வாட்டர் மெலனை வைத்துக்கொண்டு ஸ்டைலாக நடித்த காட்சியை திவாகர் ரீ கிரியேட் செய்தார். இந்த காட்சி மூலம் பிரபலமடைந்தவர் தன்னை தானே “வாட்டர் மெலன் ஸ்டார்” என அழைத்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் தனது பேச்சுக்கள் மற்றும் செயல்களால் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் நடிகர் சூரி சிறிய வேடங்களில் நடித்து, பெயிண்ட் வேலை செய்தவர் என்றும், தான் படித்தவர் என்பதால் அப்படி செய்ய மாட்டேன் என்றும் கூறினார். எனக்கு மிகபெரிய வேடங்கள் தான் வேண்டும் என ரொம்பவும் ஆணவத்தோடு பேட்டி கொடுத்திருந்தார். மேலும் தன்னை பார்த்து தான் வாட்டர் மெலன் காட்சியை மீண்டும் ரி கிரியேட் செய்ததாகவும் பேசிவந்தார்.
24
போலீசில் ஷகிலா புகார்
இதனையடுத்து திவாகர் செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு எதிராக வாக்குவாதங்கள், சர்ச்சைகள் தொடர்ந்தது. இந்த நிலையில் பிரபல நடிகை ஷகிலா “வாட்டர் மெலன் ஸ்டார்” என்று அழைக்கப்படும் திவாகர் மீது போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில், கடந்த சில தினங்களாக Watermelon ஸ்டார் என்று சொல்லிக் கொண்டு youtube சேனலில் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் டாக்டர் திவாகர் என்பவர் கடந்த 27.07.2025 அன்று தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஆன கவின்குமார் என்பவரை திருநெல்வேலி மாவட்டத்தில் வைத்து சுர்ஜித் என்பவரால் ஆணவ படுகொலை செய்யப்பட்டார்.
34
ஆணவ கொலையை நியாயப்படுத்தும் திவாகர்
பல போராட்டங்களுக்குப் பிறகு அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர். இந்த படுகொலையை நியாயப்படுத்தும் வகையில் டாக்டர் திவாகர் என்பவர் நியூஸ் கிளிட் இந்தியா என்ற youtube சேனலில் பேட்டியளிக்கும் போது சுர்ஜித் என்பவர் என்னுடைய முக்குலத்தோர் சமூகத்தைச் சார்ந்தவர் என்று வெளிப்படையாக தன்னுடைய சமூகத்தை சொல்லி இந்த ஆணவ படுகொலையை நியாயப்படுத்த வகையில் பேட்டி அளித்துள்ளார் மற்றும் Clould 7 cinema என்ற youtube சேனலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டியளிக்கும் போது
youtube பிரபலமான ஜி.பி முத்து என்பவரை பற்றி நெறியாளர் கேள்வி கேட்கும் போது டாக்டர் திவாகர் என்பவர் ஜி. பி முத்து என்பவரது சமூத்தை குறிப்பிட்டு அவர் Low caste என்று சொல்லி அவரைப் பற்றி பேசி தன்னுடைய தரத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து இதுபோன்று வெளிப்படையாக டாக்டர் திவாகர் என்பவர் பொது வெளியில் தான் சார்ந்த சமூகத்தை உயர்ந்த சாதியாகவும் மற்ற சமூகத்தை கீழ் சாதியாகவும் பேசி வரும் இந்த திவாகர் என்பவரை எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் சமூக நல்லிணத்தை கெடுக்கும் வகையில் பேட்டி அளித்து வரும் டாக்டர் திவாகர் என்பவரது மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என ஷகிலா அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.