நடிப்புல டாப்பு; படிப்பில் எப்படி? வைரலாகும் சமந்தாவின் 10ம் வகுப்பு மார்க்‌ஷீட்

First Published | Sep 3, 2024, 4:21 PM IST

நடிகை சமந்தா தன்னுடைய பள்ளிப்படிப்பை சென்னையில் தான் முடித்தார், அவர் பல்லாவரம் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தபோது எடுத்த மதிப்பெண் விவரம் வெளியாகி உள்ளது.

Samantha School Mark Sheet

கெளதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் சமந்தா. அப்படத்தில் சிம்புவை காதலிக்கும் பெண்ணாக சின்ன வேடத்தில் சமந்தா நடித்திருந்தாலும் அப்படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சமந்தா.

விண்ணைத்தாண்டி வருவாயா ரிலீஸ் ஆன பின்னர், தன்னை நடிகையாக்கியதில் கெளதம் மேனனுக்கு முக்கிய பங்கு இருக்கிறது என நெகிழ்ச்சி உடன் கூறி இருந்தார் சமந்தா. அப்போது தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படம் ரிலீஸ் ஆனபோது சமந்தாவை தலையில் தூக்கிவைத்து கொண்டாடினர் ரசிகர்கள்.

ஒரே படத்தில் உச்சம் தொட்ட சமந்தா, தமிழில் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த படம் பாணா காத்தாடி. அப்படத்தில் நடிகர் அதர்வா முரளிக்கு ஜோடியாக நடித்தார் சமந்தா. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். யுவனின் பாடல்களால் இப்படம் வேறலெவல் ஹிட் ஆனது.

Actress Samantha

இதையடுத்து தெலுங்கில் நடிகை சமந்தாவுக்கு வரிசையாக முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதை ஏற்று ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு ஆகியோருக்கு ஜோடியாக நடித்தார் சமந்தா. இதனிடையே கோலிவுட்டில் டாப் இயக்குனர்களிடம் இருந்து சமந்தாவுக்கு அழைப்பு வந்தது.

கோலிவுட்டில் முன்னணி இயக்குனர்களாக வலம் வரும் மணிரத்னம் கடல் படத்தில் நடிக்க முதலில் கமிட்டானது சமந்தா தான். அதேபோல் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஐ திரைப்படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க படக்குழு முதலில் அணுகியது சமந்தாவை தான். ஆனால் அந்த இரண்டு படங்களிலும் இருந்து விலகிவிட்டார் சமந்தா.

பின்னர் ராஜமவுலி இயக்கிய நான் ஈ திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்தார் சமந்தா. அப்படம் பான் இந்தியா அளவில் ஹிட்டனதால் சமந்தாவுக்கு மார்க்கெட் மளமளவென உயர்ந்தது. அதையடுத்து தமிழில் விஜய்க்கு ஜோடியாக, தெறி, கத்தி, மெர்சல் போன்ற படங்களில் நடித்தார் சமந்தா.

இதையும் படியுங்கள்... மெழுகு டாலு நீ; ஹன்சிகா மோத்வானி கலக்கல் கிளிக்ஸ்

Tap to resize

Samantha Ruth Prabhu

பின்னர் 2017-ம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமந்தா. இவர்களின் திருமணம் கோவாவில் உறவினர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் திரைப்பிரபலங்கள் சிலரும் கலந்துகொண்டு சமந்தா - நாக சைதன்யா ஜோடியை வாழ்த்தினர்.

திருமணத்துக்கு பின்னர் நடிகை சமந்தா தொடர்ந்து சினிமாவில் ஹீரோயினாக நடித்து வந்தார். சுமார் 4 ஆண்டுகள் ஜாலியாக சென்றுகொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கையில் கடந்த 2021-ம் ஆண்டு விரிசல் ஏற்பட்டது. அந்த ஆண்டே இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

சமந்தாவை விவாகரத்து செய்த பின்னர் நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலா மீது காதல் வயப்பட்டார். அந்த ஜோடியின் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. இருவருக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. மறுபுறும் சமந்தா மறுமணம் செய்யும் ஐடியாவில் இல்லை என்று ஓப்பனாகவே சொல்லிவிட்டார்.

Samantha studied in Pallavaram School

நடிகை சமந்தா தெலுங்கு படங்களில் நடித்து பேமஸ் ஆனாலும் அவர் பக்கா தமிழ் பெண் தான். அவர் சென்னை பல்லாவரத்தில் தான் பிறந்து வளர்ந்தார். அங்கு தான் தன் பள்ளிப்படிப்பை முடித்தார் சமந்தா. பல்லாவரத்தில் உள்ள ஸ்டீபன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தான் 10ம் வகுப்பு வரை படித்துள்ளார் சமந்தா.

நடிப்பில் கெட்டிக்காரியாக இருக்கும் சமந்தா, படிப்பிலும் டாப்பு தான். அவர் 10ம் வகுப்பு அரையாண்டு தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடங்கிய மார்க்‌ஷீட் வெளியாகி இருக்கிறது. அதில் ஆயிரத்திற்கு 887 மதிப்பெண் பெற்று முதல் ரேங்கையும் வாங்கி அசத்தி இருக்கிறார் சமந்தா. அந்த ரேங்க் கார்டு தற்போது வைரல் ஆகிறது.

அதில் ஆங்கிலம் முதல் தாளில் 90 மதிப்பெண்ணும், இரண்டாம் தாளில் 74 மதிப்பெண்ணும் வாங்கியுள்ள அவர், தமிழ் முதல் தாளில் 83 மார்க்கும், இரண்டாம் தாளில் 88 மார்க்கும் வாங்கி இருக்கிறார். கணிதத்தில் முதல் தாளில் 100 மதிப்பெண்ணும், இரண்டாம் தாளில் 99 மதிப்பெண்ணும் வாங்கி உள்ளார். அதேபோல் இயற்பியலில் 95, தாவரவியலில் 84, வரலாற்றில் 91, புவியலில் 83 மதிப்பெண் வாங்கி உள்ளார்.

Samantha 10th mark sheet

அந்த பரிசையில் முதல் ரேங்க் வாங்கிய நடிகை சமந்தாவை பாராட்டும் விதமாக, அவர் இந்த பள்ளியின் சொத்து என ஆசிரியை எழுதி இருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் நடிப்பை போல் நடிகை சமந்தா படிப்பிலும் டாப்பாக இருக்கிறாரே என ஆச்சர்யத்துடன் பார்த்து அவரை பாராட்டி வருகின்றனர்.

நடிகை சமந்தா கைவசம் தற்போது சிட்டாடெல் என்கிற வெப்தொடர் உள்ளது. இந்த வெப்தொடர் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டீகே இயக்கி உள்ளனர். இதில் வருண் தவானுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்துள்ளார்.

இதுதவிர அண்மையில் நடிகை சமந்தா தயாரிப்பிலும் இறங்கினார். அவர் தயாரிக்கும் முதல் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. விரைவில் தமிழிலும் ஒரு பிரம்மாண்ட படத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகின்றன. அது என்ன படம் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்...  ஜெயலலிதா மகன் திருமணம் முதல் நாதஸ்வரம் சீரியல் வரை! கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது எப்படி?

Latest Videos

click me!