Samantha Baby Shower : நடிகை சமந்தாவின் வளைகாப்பு விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்த விழாவின் புகைப்படங்கள் இப்போது வெளியாகியுள்ளன. அதை இங்கே பார்க்கலாம்.
நடிகை சமந்தா வீட்டில் இப்போது ஒரே கொண்டாட்டம் தான். விரைவில் தாயாகப் போகும் அவருக்கு, செவ்வாய்க்கிழமை அன்று குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் இந்த புகைப்படங்களைப் பார்த்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
24
எப்போ குழந்தை பிறக்கும்?
சமந்தாவும், அவரது கணவரும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான ராஜ் நிடிமோருவும் தங்கள் முதல் குழந்தைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் 2025 இறுதியில் கோயம்புத்தூரில் திருமணம் நடந்தது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் சமந்தாவுக்கு குழந்தை பிறக்கும் எனத் தெரிகிறது. இந்த வளைகாப்பு விழாவில் சமந்தா மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். கணவர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் இந்த விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
34
சமந்தாவுக்கு வளைகாப்பு
குடும்பத்தினர் மத்தியில் நடந்த இந்த விழாவில், சமந்தா தனது மாமியாருடன் இருந்த நெகிழ்ச்சியான தருணங்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. கடந்த ஜூன் மாதம் 'எங்கள் தங்கம்' பட வெற்றி விழாவில்தான் சமந்தா முதல்முறையாக பேபி பம்ப் உடன் தோன்றினார். அப்போதுதான் அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. பின்னர், அப்படத்தின் இயக்குநர் இந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார்.
சமந்தா தனது கர்ப்பகால அனுபவங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். ஆனால், இந்த வளைகாப்பு விழா குறித்து சமந்தா தம்பதியினர் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. ஆனாலும், சமூக வலைதளங்களில் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இந்த தம்பதிக்கு பெரிய அளவில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.