நடிப்பில் மட்டுமல்ல... படிப்பிலும் கெட்டிக்காரி தான் போல! வைரலாகும் சமந்தாவின் 10 & 12-ம் வகுப்பு மார்க் ஷீட்

Published : Aug 05, 2022, 08:10 AM IST

Samantha Ruth Prabhu : தென்னிந்திய திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் சமந்தாவின் 10 மற்றும் 12-ம் வகுப்பு மார்க் ஷீட் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

PREV
15
நடிப்பில் மட்டுமல்ல... படிப்பிலும் கெட்டிக்காரி தான் போல! வைரலாகும் சமந்தாவின் 10 & 12-ம் வகுப்பு மார்க் ஷீட்

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகில் வெற்றிகரமான நாயகியாக கொடிகட்டிப் பறக்கு நடிகை சமந்தா, பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். மாஸ்கோவின் காவிரி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர், கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார்.

25

இப்படத்தின் தெலுங்குப் பதிப்பில் நடிகர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சமந்தா. அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. சுமார் 7 ஆண்டுகள் உருகி உருகி காதலித்த இந்த ஜோடி கடந்த 2017-ம் ஆண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டது. ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.

இதையும் படியுங்கள்... Sita Ramam : அந்த ஒரு காரணத்துக்காக துல்கர் சல்மானின் ‘சீதாராமம்’ படத்திற்கு திடீரென தடை விதிப்பு

35

கடந்த ஆண்டு இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். விவாகரத்துக்கு பின்னர் இருவரும் சினிமாவில் படு பிசியாகி விட்டனர். குறிப்பாக சமந்தாவின் கெரியர் கடந்த ஓராண்டில் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

45

இந்நிலையில், நடிகை சமந்தாவின் 10 மற்றும் 12-ம் வகுப்பு மார்க் ஷீட் இணையத்தில் வெளியாகி படு வைரல் ஆகி வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் நடிகர் சமந்தா நடிப்பைப் போல் படிப்பிலும் கெட்டிக்காரியாக இருந்துள்ளார் என பாராட்டி வருகின்றனர். ஏனெனில் அவர் 10-ம் வகுப்பில் முதல் ரேங்க் எடுத்துள்ளார். அதனை பாராட்டும் விதமாக அவரது ஆசிரியர் சமந்தா தங்கள் பள்ளிக்கு கிடைத்த சொத்து என அந்த மார்க் ஷீட்டில் எழுதி உள்ளார்.

இதையும் படியுங்கள்... சைக்கிள் சவாலுக்கு ரெடியான ஆர்யா... ஜெர்சியை வெளியிட்ட சூர்யா

55

கெரியரை பொறுத்தவரை நடிகை சமந்தா கைவசம் தற்போது சகுந்தலம், யசோதா, குஷி போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர பாலிவுட்டிலும் 3 படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம் சமந்தா. அதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் தமிழிலும் தளபதி 67 படத்தில் அவர் வில்லியாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories