கொழுந்து விட்டு எரியும் பிரச்சனை... தனியாக வசிக்கும் சமந்தா... காதல் கணவரை விவாகரத்து செய்கிறாரா?

Published : Aug 30, 2021, 01:23 PM IST

நடிகை சமந்தா, அவரது காதல் கணவரை பிரிய உள்ளதாக தெலுங்கு மீடியாக்களில்  தீயாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

PREV
19
கொழுந்து விட்டு எரியும் பிரச்சனை... தனியாக வசிக்கும் சமந்தா... காதல் கணவரை விவாகரத்து செய்கிறாரா?

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும், சமந்தாவும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

29

017ம் ஆண்டு இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த சமந்தா, முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

39

விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் பிற நடிகைகள் கூட நடிக்க தயங்கும் மிரட்டலான கதாபாத்திரம் மூலம் கம்பேக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ஹிட்டான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார். 

49

இடையில் சமந்தா கர்ப்பமாக இருப்பதாகவும் இனி படங்களில் நடிக்கமாட்டார் என்றும் தகவல்கள் பரவியது. சமீபத்தில் நடந்த நடிகர் ராணாவின் திருமண நிச்சயதார்த்தத்தில் பங்கேற்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

59

பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் சமந்தா தன்னுடைய மாமியார், மாமனார், உறவுகள் என அனுசரித்து குடும்பத்தை நடத்தி வந்தார். எனவே இவரை பார்த்து பொறாமை படுபவர்களும் உண்டு. திருமணத்திற்கு பின் சமந்தா அக்கினேனி என கணவர் குடும்ப பெயரை தனது பெயருடனும் இணைத்து கொண்டார்.

69

சமூக வலைத்தளத்திலும் இந்த பெயரை சமந்தா பதிவு செய்த நிலையில், திடீரென கணவர் குடும்ப பெயரை சமந்தா நீக்க, கணவரை விட்டு பிரிகிறார் என்றும், விவாகரத்து போவதாகவும் சில வதந்திகள் பரவ துவங்கியது.

79

இந்த சர்ச்சை குறித்து, கணவன் - மனைவி இருவருமே எந்த ஒரு தகவலையும் வெளியிடாத நிலையில், சமீபத்தில் இருவரும் இணைந்து கோவாவில் பண்ணை வீடு ஒன்றை கட்டி வருவதாகவும் கூறப்பட்டது. எனவே தங்களுடைய செயல் மூலம் சமந்தா - நாக சைதன்யா பதிலடி கொடுத்ததாக கூறப்பட்டது.

89

ஆனால் தற்போது மீண்டும் இவர்களது விவாகரத்து விவகாரம் சமூக வலைத்தளத்தில் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள தகவலில், சாமான்யா - நாக சைதன்யா இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே நாகர்ஜுனா மற்றும் அவர்களது குடும்பத்தினர் சமாதானம் செய்ய  முயன்றபோதும் முடியாமல் போனதால் இருவரும் விவாகரத்து முடிவை நாடியுள்ளதாக கூறப்படுகிறது.
 

99

மேலும் தற்போது சமந்தா மட்டுமே தனியாக வசித்து வருவதாகவும், அவரது கணவர் நாக சைதன்யா தந்தை வீட்டிற்கு சென்று விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இப்படி வெளியாகும் தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது இதுவரை தெரியாத நிலையில், விரைவில் இது குறித்து உண்மை தகவலை சமந்தா அல்லது நாகசைதன்யா வெளியிட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 

click me!

Recommended Stories