நான் ரொம்ப பிசி... அப்பா வயது நடிகர் படத்தில் இருந்து கழண்டு கொண்ட ஸ்ருதிஹாசன்! ஜோடியாவது யார் தெரியுமா?

Published : Aug 30, 2021, 11:59 AM IST

நடிகை ஸ்ருதி ஹாசனை 61 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வந்த நிலையில், கால் ஷீட் பிரச்சனை காரணமாக, தன்னால் நடிக்க முடியாது என கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தில் அவருக்கு பதில் கமிட் ஆகியுள்ள நடிகை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.  

PREV
15
நான் ரொம்ப பிசி... அப்பா வயது நடிகர் படத்தில் இருந்து கழண்டு கொண்ட ஸ்ருதிஹாசன்! ஜோடியாவது யார் தெரியுமா?

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன் சில காலம் சினிமாவை விட்டு விலகி ஆல்பம் பாடல்களில் கவனம் செலுத்தி வந்த நிலையில் தற்போது மீண்டும், லாபம் படத்தின் மூலம் திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

25

தெலுங்கிலும், நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக 'சலார்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரை மற்ற சில படங்களிலும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது.

35

அந்த வகையில்,  இயக்குனர் கோபிசந்த் மாலினேனி அடுத்ததாக 61 வயது நடிகர்  பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனை படக்குழு அணுகிய நிலையில், அடுத்தடுத்து சில படங்களில் நடிப்பதால், நான் ரொம்ப பிஸி என நாசுக்காக இந்த படத்தில் இருந்து ஸ்ருதி கழண்டு கொண்டார்.

45

இதை தொடர்ந்து மற்ற சில முன்னணி ஹீரோயின்களுடன் படக்குழு பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், தற்போது நடிகை த்ரிஷாவை கமிட் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

55

ஆனால் இதுகுறித்து, அதிகார பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும், திரிஷா தான் நாயகி என தெலுங்கு திரையுலக வட்டாரம் கிசுகிசுகிறது. அதே போல் ஏற்கனவே திரிஷா பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக, கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான லயன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

click me!

Recommended Stories