தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை சமந்தா, கடந்த 2010-ம் ஆண்டு கவுதம் மேனன் - சிம்பு கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமான இவர், பின்னர் கோலிவுட்டில் சூர்யா, விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம் போன்ற டாப் நடிகர்களுடன் அடுத்தடுத்து கூட்டணி அமைத்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.