Beast : ஆக்‌ஷன் காட்சிக்காக 13 ஆண்டுகளுக்கு பின் விஜய் எடுத்த ரிஸ்க்... பீஸ்ட் டிரைலரில் இதை கவனிச்சீங்களா..!

Published : Apr 03, 2022, 11:58 AM IST

Beast : பீஸ்ட் டிரைலர் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்ததாக இருந்தது. இதில் நடிகர் விஜய் ஜெட் விமானத்தில் பறந்தபடி ஆக்‌ஷன் செய்யும் காட்சிகளும் இதில் இடம்பெற்று இருந்தன.

PREV
15
Beast : ஆக்‌ஷன் காட்சிக்காக 13 ஆண்டுகளுக்கு பின் விஜய் எடுத்த ரிஸ்க்... பீஸ்ட் டிரைலரில் இதை கவனிச்சீங்களா..!

கோலமாவு கோகிலா, டாக்டர் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வரும் நெல்சன் தற்போது முதன்முறையாக நடிகர் விஜய் உடன் கூட்டணி அமைத்துள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகி உள்ள புதிய படம் பீஸ்ட். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
 

25

மிஷ்கினின் முகமூடி படம் மூலம் தமிழில் அறிமுகமான பூஜா ஹெக்டே, இதையடுத்து 9 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் பீஸ்ட் படம் மூலம் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அவர் நடித்திருக்கிறார். மேலும் விடிவி கணேஷ், ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

35

தமிழில் வெளியாகி உள்ள பீஸ்ட் திரைப்படம் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்து பான் இந்தியா படமாக வருகிற ஏப்ரல் மாதம் 13-ந் தேதி ரிலீசாக உள்ளது. பீஸ்ட் படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக அதன் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது.
 

45

இப்படத்தில் வீர ராகவன் என்கிற கதாபாத்திரத்தில் ரா ஏஜெண்டாக நடித்துள்ளார் நடிகர் விஜய். ஷாப்பிங் மாலை ஹைஜேக் செய்யும் பயங்கரவாதிகளிடம் சிக்கிக் கொள்ளும் மக்களை நடிகர் விஜய் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் கதை. ஆக்‌ஷன், காமெடி காட்சிகள் நிறைந்த படமாக இது தயாராகி உள்ளது.

55

நேற்று வெளியான பீஸ்ட் டிரைலர் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்ததாக இருந்தது. இதில் நடிகர் விஜய் ஜெட் விமானத்தில் பறந்தபடி ஆக்‌ஷன் செய்யும் காட்சிகளும் இதில் இடம்பெற்று இருந்தன. இதன்மூலம் நடிகர் விஜய் 13 ஆண்டுகளுக்கு பின் இத்தகைய ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளது தெரியவந்துள்ளது. அவர் கடைசியாக வில்லு படத்திற்காக விமானத்தில் தொங்கியபடி ஆகஷன் காட்சிகளில் நடித்திருந்தார், அதன்பின் தற்போது தான் அவ்வாறு ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்.... Valimai vs Beast : ‘வலிமை’ படைத்த டாப் டக்கர் சாதனையை பீட் பண்ண முடியாமல் பின்தங்கிய ‘பீஸ்ட்’

Read more Photos on
click me!

Recommended Stories